வேலூர், செப்.10- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிறுவன தலைவர்களில் ஒரு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட முன்னாள் செயலாளரும் மூத்த தலைவருமான தோழர் டி.ஆர்.புருஷோத்தமன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. காட்பாடியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு தலை வர் ப.சுந்தரராஜன், வேலூர்-திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.நாராயணன், கே.சாமிநாதன், பி.காத்தவராயன், செ.ஏகலைவன், காட்பாடி வட்ட செயலாளர் ஆர்.சுடரொளியன், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், பிரகலநாதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை செயலாளர் ப.செல்வன், அப்புசாமி, மன்னார், ராணிப்பேட்டை மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர்கள் பி.ரகுபதி, டி.சந்திரன், என்.ரமேஷ், எல்.சி.மணி, மணிகண்டன், ஆட்டோ சங்க நிர்வாகிகள் ரமேஷ், பாபு, கார்த்திக், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் எம்.கோவிந்தராஜ், திட்டக் கிளை நிர்வாகிகள் ஜெகன், சின்ன துரை, முரளிகிருஷ்ணன், இன்பநாதன், வெங்கடேசன் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, தோழர் புருஷோத்தமன் உடல் பாலாற்றங்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக காந்திநகர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி பேருந்து நிறுத்தத்தில் இருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டது.