சென்னை, பிப்.21 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவொற்றியூர் பகுதி 6ஆவது வட்டம் , சிவசக்தி நகர் கிளை உறுப்பி னர் கே.பி.அழகர் சாமி ஞாயிறன்று இரவு எண்ணுர் அருகே சாலைவிபத்தில் காலமானார் அவருக்கு வயது 50, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சியில் மிகுந்த ஈடுபாட்டோடு, தொடர் இயக்கங்களில் பங்கேற்றவராவார். சிவசக்தி நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அறிமுகப்படுத்தியவர். அப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து குடிநீர் கிடைக்க களப் போராட்டங்கள் பல நடத்தி சிறைச்சென்றவர். அவரது இழப்பு கட்சிக்கும் , அவரது குடும்பத்திற்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு என்று சிபிஎம் திருவொற்றியூர்-எண்ணூர் பகுதிக்குழு தெரிவித்துள்ளது. சிவசக்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு சிபிஎம் வடசென்னை மாவட்டச்செயலாளர் எல்.சுந்தரராஜன், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், எஸ்.பாக்கியம், எல்.பி.சரவணதமிழன், பகுதிச்செயலாளர் கதிர்வேல், கி.ராதை, செல்வகுமாரி (மாற்றுத்திறனாளிகள் சங்கம்), புஷ்பா,வெங்கட்டையா,சுரேஷ் உள்ளிட்ட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். தோழர் அழகர்சாமியின் உடல் செவ்வாயன்று திருவொற்றியூர் மயானத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.