districts

img

உயர்மின் கோபுரங்களால் பாதித்தோருக்கு இழப்பீடு விவசாயிகள் சங்க ராணிப்பேட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

ராணிப்பேட்டை, ஆக. 20- உயர்மின் கோபுரங்கள் அமைப்பதால் பாதிக்கும் விவசாயிகளுக்கு அதிகப்பட்சமாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட முதல் மாநாடு எஸ். கிட்டு தலைமையில் முத்துக்கடையில் சனிக்கிழமை (ஆக. 20) நடை பெற்றது. நிலவு குப்புசாமி சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். ஏ.குமார் வர வேற்றார். ஏ.சம்பத் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.  மாநிலச் செயலாளர் பி.துளசி நாராயணன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.ரகுபதி, ஏ.எபி.எம்.சீனி வாசன் (சிஐடியு), சேகர், குமார் (மலைவாழ் சங்கம்), மாதர் சங்கம் மாவட்டச் செயலாளர் ஆர்.திலகா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலச் செயலாளர் பி.டில்லி பாபு மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக ராணிப் பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்திலி ருந்து விவசாயிகள் பேரணி நடைபெற்றது.
தீர்மானங்கள்
உயர்மின் கோபுரங்க ளால் பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு மறுமதிப்பீடு செய்து ஏனைய மாவட்டங்க ளில் வழங்கியது போல் அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும், நேரடி கொள்முதல் நிலை யங்களின் குளறுபடிகளை களைத்து, நிரந்தர குடோன் அமைக்க வேண்டும், பயிர் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்க வேண்டும், அரசு நவல்லாக் பண்ணையை மேம்படுத்த வேண்டும், பண்ணைகளில் பணிபுரியும் ஆண், பெண் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து, மாத மாதம் ஊதியம் வழங்குவதை உத்தரவாதம் செய்ய வேண்டும், மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களை விவ சாயப் பணிகளில் ஈடு படுத்த வேண்டும், 100 நாள் வேலைகளை 200 நாட்க ளாக உயர்த்தி, தினசரி கூலி ரூ. 650 வழங்க வேண்டும், காஞ்சனகிரி மலையை சுற்றுலா மையமாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
20 பேர் கொண்ட மாவட்டக்குழுவுக்கு தலை வராக எஸ்.கிட்டு, செய6 லாளராக எல்.சி.மணி, பொருளாளராக சி.ராதா கிருஷ்ணன் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

;