districts

img

மாட்டுவண்டி மணல் குவாரிகளை உடனே துவங்குக! சிஐடியு புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

அறந்தாங்கி, அக்.16 - இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) புதுக் கோட்டை மாவட்ட மாநாடு ஞாயிறன்று பேராவூரணி சாலை தாலிப் மஹாலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சிஐடியு மாவட்ட தலைவர் க.முகமதலி ஜின்னா தலைமை வகித்து உரையாற் றினார்.  அங்கன்வாடி சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.சந்திரா மாநாட்டு  கொடியேற்றினார். வரவேற்பு குழு தலைவர் கே.தங்கராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத் தலைவர் சி.அன்புமணவாளன் அஞ்சலி தீர்மானம் வாசித் தார். சிஐடியு மாநிலப் பொரு ளாளர் மாலதி சிட்டிபாபு மாநாட்டை துவக்கி வைத்து  உரையாற்றினார்.  மாவட்ட செயலாளர் ஏ. ஸ்ரீதர் வேலை அறிக்கையை யும், மாவட்டப் பொருளா ளர் எஸ்.பாலசுப்ரமணியன் வரவு-செலவு அறிக்கையை யும் சமர்ப்பித்தனர். கந்தர் வகோட்டை சட்டமன்ற உறுப் பினர் எம்.சின்னத்துரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.இராமையன்,  விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் எஸ்.சங்கர் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.  தையல் கூட்டுறவு உறுப் பினர்களுக்கு தையல் கூலியை உயர்த்தி வழங்க  வேண்டும். சமூக பாது காப்பு திட்டத்தில் பெண் தொழிலாளிக்கு 55 வயதில் பென்சன் வழங்க வேண்டும்.  கூட்டுறவு மூலம் தையல்  மிஷின் வழங்க வேண்டும்.  அரசு மேல்நிலைப் பள்ளி யில் படிக்கும் மாணவ, மாண விகளுக்கான சீருடையை தையல் கூட்டுறவு மூலம் தைப் பதற்கு அனுமதி வழங்க  வேண்டும்.

தையல் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு அடை யாள அட்டை வழங்க வேண்டும்.  மின்வாரியத்தில் உள்ள  56 ஆயிரம் காலிப் பணியி டங்களை நிரப்ப வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென் சன் திட்டத்தை அமல்படுத்த  வேண்டும். மின்வாரியம் பொதுத் துறையாகவே தொடர வேண்டும். பகுதிநேர ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரப் படுத்த வேண்டும். புதுக் கோட்டை மாவட்டத்தில் 10 மாட்டுவண்டி மணல் குவாரி களை உடனடியாக துவக்க  வேண்டும். 2017-ல் ஒரு மாட்டுவண்டிக்கு அரசு  நிர்ணயித்தது ரூ.63. தற் போது அரசு நிர்ணயித்திருப் பது ரூ.714. இதை ரத்து  செய்து, பழைய விலை யையே தொடர வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாவட்டத்தின் புதிய தலைவராக க.முகமதலி ஜின்னா, செயலாளராக ஏ. ஸ்ரீதர், பொருளாளராக எஸ். பாலசுப்ரமணியன் உள்ளிட் டோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு மாநிலச் செயலாளர் எம்.ஐடா ஹெலன் சிறப்புரையாற்றினார். வர வேற்புக் குழு செயலாளர் எல்.அலாவுதீன் நன்றி கூறினார்.

பேரணி - பொதுக்கூட்டம்
முன்னதாக, சிஐடியு, புதுக்கோட்டை மாவட்ட 12 வது மாநாட்டு பேரணி பொதுக்கூட்டம் புதுக் கோட்டை மாவட்டம் அறந் தாங்கியில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் பங்கேற்ற பேரணி  அறந்தாங்கி செக் போஸ்ட் டில் இருந்து துவங்கியது. பேரணியை சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டி பாபு துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்ட தலைவர் க. முகமதலி ஜின்னா, மாவட் டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், பொருளாளர் எஸ்.பால சுப்பிரமணியன், மாவட்ட துணைத்தலைவர் அன்பு மணவாளன், சிஐடியு அங்க வாடி சங்க மாநிலப் பொரு ளாளர் எஸ்.தேவமணி மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், செங் கொடி ஏந்தி புதுக்கோட்டை சாலை பெரிய கடைவீதி, தாலுகா அலுவலக சாலை, பேராவூரணி சாலை வழி யாக சென்ற பேரணி, பொதுக் கூட்ட மேடை அருகே நிறைவு  பெற்றது.

;