districts

img

மர்ம நோயால் இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு, ஏப். 26- திருக்கழுக்குன்றம் வட்டத் திற்குட்பட்ட கிராமங்களில் மர்ம  நோயால் பாதிக்கப்பட்டு இறந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின்  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செஙங்கல்பட்டு மாவட்டம்,  திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட் பட்ட நென்மேலி, காங்கேயன்குப்பம், அழகுசமுத்திரம், உள்ளிட்ட பல்வேறு  கிராமங்களில் கடந்த ஆண்டு  நவம்பர், டிசம்பர் மாதங்களில் மர்ம  நோயால் 300க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள், குட்டிகள் இறந்து  போயின, இதுகுறித்து அழகுசமுத்தி ரம் கால்நடைத்துறை மருத்துவ மனையில் தகவல் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கபட வில்லை. இந்நிலையில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் கடந்த  மாதம் பாதிக்கப்பட்ட வெள்ளடுகளு டன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து உரிய மருத்துவ முகாம் நடத்திடவும், இறந்து போன வெள்ளாடு ஒன்றுக்கு 10 அயிரம் இழப்பீடு வழங்கிட வலியுறுத்தியும் முறையிட்டனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு  வழங்கிட வலியுறுத்தி  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்  செங்கல்பட்டு கால்நடைத்துறை துணை இயக்குநர் அலுவலகம் முன்பு திங்களன்று (ஏப். 26) சங்கத்  தின் திருக்கழுக்குன்றம் பகுதி செய லாளர் இ.கோதண்டன் தலைமை யில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது. இறந்த ஆடு ஒன்றுக்கு ரூபாய் 10  ஆயிரம் இழப்பீடு வழங்கிட வேண்டும்,  தகவல் தெரிவித்தும் எந்த  வித நடவடிக்கையும் எடுக்காத அழகு சமுத்திரம் கால்நடை மருத்துவர் மீது  நடவடிக்கை எடுத்திட வேண்டும்,  கால்நடைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் மருத்துவ மனையில் கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்,

கால்நடை வளர்க்கும் அனைத்து விவசாயி களுக்கும் உரிய  பயிற்சி வழங்கிட வேண்டும், கால்நடைகளுக்கு தேவையான அவசர ஊர்தி வசதி செய்திட வேண்டும், செங்கல்பட்டு மாவட்ட தலைமை கால்நடை மருத்து வமனையில் ஸ்கேன் மற்றும் மருத்துவ கருவிகளை அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன. கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  மாவட்டத் தலைவர் எஸ்.ராஜா,  மாவட்ட செயலாளர் ஜி.மோகனன்,  மார்க்சிஸ்ட் கட்சியின் திருக்கழுக் குன்றம் பகுதி செயலாளர் எம்.குமார்,  விவசாயிகள் சங்கத்தின் வட்ட துணைச் செயலாளர் அழகேசன் உள்ளிட்ட பலர் பேசினர்.

;