india

10 மாநிலங்களின் 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

புதுதில்லி, மே 12- நான்காம் கட்ட மக்களவை தேர்தலில் 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் திங்களன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

18ஆவது மக்களவை தேர்தலுக்கான அறி விப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மார்ச் 16 அன்று வெளியிட்டார். அறிவிப்பின்படி நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடை பெற்று வரும் நிலையில், இதுவரை மூன்று கட்டத் தேர்தல் (ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7) 283 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. தொடர்ந்து 9 மாநிலங்கள் மற்றும்  ஒரு யூனியன் பிரதேசம் என 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கான 4ஆவது கட்ட வாக்குப்பதிவு திங்களன்று நடைபெறுகிறது. 

மாநிலங்களும்... தொகுதிகளும்
1. ஆந்திரா - 25 ; 2. பீகார் -  5
3. ஜம்மு காஷ்மீர் - 1
4. ஜார்கண்ட் - 4
5. மத்தியப்பிரதேசம் - 8
6. மகாராஷ்ட்ரா - 11
7. ஒடிசா - 4 ; 8. தெலுங்கானா - 17
9. உத்தரப்பிரதேசம் - 13
10. மேற்குவங்கம் - 8
இதில் ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மற்றும் தெலுங்கானாவின் 17 மக்களவைத் தொகுதி களுக்கும் ஒரே கட்டமாக திங்களன்றுடன் மக்களவை தேர்தல் நிறைவு பெறுகிறது. இதே  போல 4 கட்டங்களாக நடைபெற்று வரும் மத்தியப்பிரதேசம் மாநிலத்திலும் திங்களன்று டன் மக்களவை தேர்தல் முடிவடைகிறது.

ஒடிஷா, ஆந்திராவில்  சட்டமன்றத் தேர்தல்
ஒடிஷா, ஆந்திராவில் மக்களவை தேர்தலு டன் சட்டமன்றத்திற்கும் திங்களன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 

ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே  கட்ட  மாகவும், ஒடிசாவில் உள்ள 147 சட்டமன்ற தொகு திகளில் முதல்கட்டமாக 28 தொகுதிகளுக்கு திங்களன்று வாக்குப்பதிவு நடக்கிறது. 

ஒடிசாவில் 4 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.