districts

img

மழைநீர் கால்வாய் பணி திருவொற்றியூரில் ஆணையர் ஆய்வு

சென்னை, ஏப்.19 - பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி மணலி மற்றும் திருவொற்றியூர் மண்டலங்களில் ஆய்வை மேற்கொண்டார். மணலி எக்ஸ்பிரஸ் சாலையில் நடை பெறும் மழைநீர் வடிகால் வாய் பணியை வி.பி நகர் அருகே பார்வையிட்டார். அப்போது ஆணை யரிடம் பேசிய 4வது வட்ட மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், கொசத்தலை ஆறு வடிகால்வாய் திட்டம் முழுமையாக விரைந்து நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்தால், 4, 6, 7 வட்டங்கள் மழைக்  காலங்களில் வெள்ளத்தால் மூழ்கும் நிலையிலிருந்து பாதுகாக்க முடியும். வடி கால்வாய் திட்டத்தின்படி, ஜோதி நகரில் இருந்து பக்கிங்காம் கால்வாய் இணைப்பு பணி துவங்கப் படவில்லை என்றார். ஜோதி நகர் - சடையங்குப்பம் மேம்பாலம் பணியையும் ஆணையர் பார்வையிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். கால்வாய் இணைப்புப் பணியை மழைக் காலத் திற்கு முன்பு விரைந்து முடிக்க வேண்டும் என்று  அதிகாரிகளுக்கு அறிவுறுத் திய ஆணையர், அடுத்த மாதம் பணிகளை பார்வையிட வருவேன் என்றார். இந்நிகழ்வின்போது, திருவொற்றியூர் மண்டல அலுவலர் சங்கர், செயற் பொறியாளர் பால் தங்க துரை உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.