districts

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு: காய்கறி விலை வீழ்ச்சி

சென்னை,  மார்ச் 5 - சென்னை கோயம்பேடு  சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகா ராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து இன்று 400 லாரிக ளில் காய்கறி விற்பனைக்கு குவிந்துள்ளது. காய்கறி விலை கடுமை யாக வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் அதை வாங்கி செல்ல அதிகளவில் வியாபாரிகள் சந்தைக்கு வரவில்லை. தக்காளி, அவரை, கத்தரிக்காய், பீன்ஸ் உள்ளிட்ட பெரும் பாலான காய் கறிகளின் விலை நாளுக்கு நாள் வீழ்ச்சி  அடைந்து வருகிறது. காய்கறி உற்பத்தி செய்து அறுவடை செய்வதற்கு உண்டான செலவை கூட  விவசாயிகளால் தற்போது  திரும்ப எடுக்க முடிய வில்லை. இதன் காரண மாக போதிய விலை கிடைக்காமல் தினசரி நஷ்டம் ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர். அதே சமயம் தினசரி சமையலுக்கு பயன் படுத்தப் படும் தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை வீழ்ச்சி  அடைந்துள்ளது இல்லத் தரசிகளை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. தற்போது வழக்கத்தை விட அதிகளவில் காய்கறிகளை வீட்டிற்கு வாங்கி செல்கின் றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. காய்கறி மொத்த விற்பனை விலை விபரம் வரு மாறு (கிலோவில்) :- தக்காளி-ரூ.8, ஆந்திரா வெங்காயம்-ரூ.15, நாசிக் வெங்காயம்-ரூ.25, உருளைக்கிழங்கு-ரூ.17, சின்ன வெங்காயம்-ரூ.25, உஜாலா கத்தரிக்காய்-ரூ.30, வரி கத்தரிக்காய்-ரூ.10, பீன்ஸ்-ரூ.20, வெண்டைக் காய்-ரூ.20, முருங்கைக் காய்-ரூ.80, ஊட்டி கேரட்- ரூ.70, கேரட்- ரூ.30, பீட் ரூட்-ரூ.15, முட்டை கோஸ்-ரூ.8, பன்னீர் பாகற் காய்-ரூ.20, கோவக்காய்- ரூ15, பட்டை கொத்த வரங்காய்-ரூ.20, முள்ளங்கி-ரூ.7, நூக்கல் -ரூ.10, சவ்சவ்-ரூ.6, புடலங் காய்-ரூ.6, அவரைக்காய்-ரூ.10, சுரக்காய்-ரூ.6, வெள்ள ரிக் காய்-ரூ.15, குடை மிளகாய்-ரூ.40, சோளம்- ரூ.20, காலி பிளவர் ஒன்று-ரூ.10, இஞ்சி-ரூ.30, பச்சை மிளகாய்-ரூ.45 எலு மிச்சை-ரூ.80.