districts

 கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் ஒன்றின் ஐந்தாவது பாடலான “உறுதி” -யை வெளியிட்டுள்ளது

சென்னை, மே 27-  

     கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் ஒன்றின் ஐந்தாவது பாடலான “உறுதி” -யை வெளியிட்டுள்ளது.  

    பிரபல பாடகர் சஞ்சய் சுப்ரமணியன் மற்றும் தமிழ் சூஃபி இசை உலகில் புதியவரான அரிபுல்லா ஷா ஃபகிர் ஆகியோர் இடையேயான அற்புதமான ஒத்துழைப்பை இந்த பாடலுக்கான இசை வெளிப்படுத்துகிறது.  

    புகழ்பெற்ற சன்ஷைன் ஆர்கெஸ்ட்ராவுடன்  இவர்கள் இணைந்து இந்த பாடலை உருவாக்கியுள்ளனர். புண்யா ஸ்ரீனிவாஸ் மற்றும் கிருத்திகா நெல்சோனின் வரிகள் பாடலுக்கு ஒரு தனித்துவமான சிறப்பை சேர்க்கிறது.  கோக் ஸ்டூடியோ தமிழ் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்பூட்டிபை கானா, சாவன், வையங்மியூசிக், மற்றும் ஆடிபிள் ஆகிய ஒடிடி தளங்களில் கிடைக்கிறது.