கடலூர்,மே 19-
உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை நிலை நாட்டிட தமிழ்நாட்டில் 7 முனைகளிலிருந்து சிஐடியு சார்பில் நடை பயண பிரச்சாரம் நடை பெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக கடலூர் சிஐடியு அலு வலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (மே 19) மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சிஐடியு மாவட்டத் தலைவர் பி. கருப்பையன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலை வர் ஜி. பாஸ்கரன் வர வேற்றார்.
சம்மேளன துணைத் தலைவர் எம்.சந்திரன், மாநில உதவி பொதுச் செயலாளர் திருச்செல்வன், மாநிலச் செயலாளர் சி. ஜெயபால், மாவட்டச் செயலாளர்கள் டி.பழனிவேல் (கடலூர்), திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் (திருவாரூர்), கே. தங்கமணி (நாகை), பி. மாரியப்பன் (மயிலாடுதுறை), அரியலூர் மாவட்ட செய லாளர் பி. துரைசாமி (அரியலூர்), தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் எம். கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் உரை யாற்றினர்.
மாவட்ட துணைச் செயலாளர் ஜி.பாஸ்கரன், இணைச் செயலாளர் பி. திருமுருகன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
முன்னதாக, புதுவை சப்தர் ஹஸ்மி கலைக்குழு வின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.