சென்னை,டிச.23- சென்னை பல்கலைக்கழக கல்லூரிகள் இடையேயான 54-வது ஏ.எல். முதலியார் பொன்விழா நினைவு தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. போட்டி முடிவில் பெண்கள் பிரிவில் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி 14 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 30 பதக்கம் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. ஆண்கள் பிரிவில் லயோலா 12 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் பதக்கம் பெற்று முதல் இடத்தை பிடித்தது.