districts

சென்னை மாநகராட்சி தேர்தல் 101 பெண்கள் வெற்றி

சென்னை,பிப்.23- சென்னை மாநகராட் சிக்குட்பட்ட 200 வார்டுகளில் திமுக  153 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 15 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது மார்க்சிஸ்டு கம்யூனி ஸ்ட், விடுதலை சிறுத்தை கள்  தலா 4வார்டுகளிலும், ம.தி.மு.க. 2 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்டு,  பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,  அ.ம.மு.க. தலா 1 இடத்திலும்  சுயேட்சை கள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 200  வார்டுகளில் 101 வார்டுக ளில் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் திமுகவில் மட்டும் 80 பெண்கள் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக.வில் 4 பெண்க ளும், காங்கிரசில் 7 பெண்க ளும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சியில் 3 பெண்க ளும், விடுதலை சிறுத்தை கள் கட்சியில் 2 பெண்க ளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு பெண்ணும், பா.ஜனதாவில் ஒரு பெண் ணும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு பெண்ணும், 2 பெண் சுயேட்சைகளும் மொத்தம் 101 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று சென்னை மாநகராட்சி மன்றத்தில் கால் பதிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் முதல் முறையாக கவுன் சிலர்களாக தேர்ந்தெடுக் கப்பட்டு சென்னை மாநக ராட்சி மன்றத்துக்குள் நுழை கின்றனர். 50 விழுக்காடு இட ஒதுக்கீடு காரணமாக பெண்கள் ஆண்களுக்கு  நிகராக  மாநகராட்சி மன்றத் தில் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.