districts

சென்னை விரைவு செய்திகள்

ஊத்தங்கரை அருகே பாம்பு கடித்து பெண் பலி

ஊத்தங்கரை,மே 22 கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள புதுகாடு பகுதியை சேர்ந்தவர் கணேசன்.  இவரது மனைவி மகா லட்சுமி (வயது 45). விவ சாயி. கடந்த 20ந் தேதி இவர் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு சிகிச்சை பல னின்றி மகாலட்சுமி  உயி ரிழந்தார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.


ரயில்  மோதி வாலிபர் பலி

வேலூர்,மே 22 ஜோலார்பேட்டை அருகே  ரயில்  மோதி வாலிபர் உயிரிழந்தார். ஜோலார்பேட்டை  ரயில்  நிலையம் ஸபார்சம்பேட்டை  ரயில் வே கேட் அருகே சுமார் 35 வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர் சனிக்கிழமை (மே 21)  ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆரஞ்சு நிற சட்டை யும் கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருந்த அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.  இது குறித்து  ரயில்வே போலீ சார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


காவலூர் பகுதியில் சுற்றிய காட்டு யானை விரட்டியடிப்பு

வாணியம்பாடி,மே 22- திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தை அடுத்த காவலூர் நாயக்கனூர் பகுதிகளை ஒட்டி வனப்பகுதி யில் 10 நாட்களுக்கும் மேலாக ஒற்றைக் காட்டு யானை சுற்றித்திரிகிறது. அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயி ரிடப்பட்டுள்ள பயிர்களை துவம்சம் செய்தது. இது  குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 12 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் 4 குழுக்களாக பிரிந்து நாயக்கனூர் ,கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து ஒற்றைக் காட்டு யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். வனத்துறையினர் வெற்றிகரமாக யானையை காவலூரை அடுத்த மலை ரெட்டி ஊர் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனால் விவசாயிகளும், பொது மக்களும் நிம்மதி அடைந்த னர்.


டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி சாவு

கீழ்பென்னாத்தூர்,மே22- கீழ்பென்னாத்தூர் அடுத்த நாரியமங்கலம் கிராமத்தை சார்ந்தவர் தேவ ராஜன் (வயது 43) விவ சாயி. அதே ஊரை சேர்ந்த வர் ரங்கநாதன் (65) தவில் வித்வான் சனிக்கிழமை இரு வரும் டிராக்டரில் சென்ற னர். காகுளத்துபட்டி அருகே உள்ள ராமையா குளம் அருகே வரும்போது, எதிரில் வந்த இருசக்கர வாக னத்திற்கு வழிவிடுதற்காக தேவராஜன் டிராக்டரை சாலை ஓரம் ஒதுங்கினார்.  எதிர்பாராதவிதமாக சாலை யோர பள்ளத்தில் டிராக்டர் நிலைதடுமாறி கவிழ்ந்தது. அப்போது ரங்கநாதன் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.


கடலூர் அருகே வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவி பலி

கடலூர் மே 22 கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே கீழ் பூவாணிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மகள் அஞ்சலி (வயது 12). அதே கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். சனிக்கிழமை  மாலை ஆணையம்பேட்டை பெருமாள் ஏரி பாசன வாய்க்காலில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து புதுச்சத்தி ரம் காவல்நிலையத்தினர் உடலை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.


15 வயது சிறுவன் மர்ம சாவு

குடியாத்தம், மே 22 வேலூர் மாவட்டம் குடி யாத்தம் அடுத்த பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவரது மனைவி மகாலட்சுமி இவர்களது மகன் ஸ்ரீசாந்த் (வயது 15) ஸ்ரீசாந்த் சிறு வயது இருக்கும் போது அவரது தந்தை இறந்துவிட்டார். தனது சித்தப்பா ராஜீவ் காந்தி வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில்  ஞாயிறன்று காலை பாக்கம் கிராமத்தில் உள்ள கன்னி கோவிலில் உள்ள எட்டி மரத்தில் கயிற்றால் தூக்கிட்ட நிலையில் சிறு வன் இறந்து கிடந்தான. அப்பகுதி பொதுமக் பள் சிறுவன் தூக்கில் தொங்கியதை  பார்த்த பொதுமக்கள் பரதராமி  காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.


 

;