districts

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க சோதனை

சென்னை,அக்.21-  தீபாவளியையொட்டி சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் வெள்ளி முதல் பயணத்தை தொடங்கி வருகின்றனர். பண்டிகை கால கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை போக்குவரத்து துறையை சேர்ந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தமிழகம் முழுவதும் கண்காணிக்கின்றனர். கடந்த 18-ந்தேதி முதல் கண்காணிக்கப்பட்டாலும் வெள்ளியன்று மாலையில் இருந்து வெளியூர் பயணம் அதிகரிப்பதால் அதிரடி சோதனை யில் ஈடுபடுகின்றனர்.  சென்னை இணை ஆணையர்  ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் வட்டார போக்கு வரத்து அலுவலர்கள், ஆய்வாளர்கள் அடங்கிய 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம், போரூர், செங்குன்றம், செங்கல்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் பயணிகளிடம் கூடுதல் கட்ட ணம் வசூலிப்பது குறித்து புகார் தெரி வித்தால் அதை திருப்பி தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கூறப்படுகிறது.

;