districts

ரயில்களில் பெண்கள் பெட்டியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த திட்டம்

 சென்னை, செப்.6-  சென்னை-புறநகர் பகுதி மக்களை இணைக்கும் பாலமாக மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் 4 வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்கள் அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை  இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரை -தாம்பரம்-செங்கல்பட்டு, மூர்மார்க் கெட்-அரக்கோணம், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி, கடற்கரை-வேளச் சேரி ஆகிய மார்க்கத்தில் தினமும் 680 ரயில்கள் இயக்கப்படுகிறது. சுமார் 8 லட்சம் பயணிகள் மின்சார ரயிலில் பயணம் செய்கிறார்கள். இதில் 3 லட்சம் பேர் பெண்கள். மின்சார ரயில் களில் பெண் பயணிகளுக்கு பாது காப்பு அளிக்கும் வகையில் பெண்கள் பெட்டியில் முன்பகுதியில் ஒரு பெண் காவலரும், பின்பகுதியில் ஒரு பெண் காவலரும் இரவு நேரத்தில் பணியில் இருந்து வருகிறார்கள். அதிரடி ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அளித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் காவலர் ஒருவரை கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்கள் பெட்டியில் பயணித்த ஒருவரை வெளியேற்றிய போது பெண் காவலர் தாக்கப் பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து  மின்சார ரயில்களில் இரவு நேரத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பை தீவிரப் படுத்த ரயில்வே நிர்வாகம் ஆலோ சித்து வருகிறது.

பாதுகாப்பில் ஈடுபடும்  ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் தங்களை தற்காத்து கொள்ள  கூடுதலாக பாதுகாப்பு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கலாமா என்று ரயில்வே பாதுகாப்பு படை உயர்  அதிகாரிகள் ஆலோசித்து வருகின்ற னர். இந்த நிலையில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்யும் போது அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார ரயில்களில் உள்ள அனைத்து பெண்கள் பெட்டியிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தினால் குற்ற  நடவடிக்கைகளை கண்காணிப்பதோடு அதில் ஈடுபடக் கூடியவர்களை எளிதில் கண்டுபிடித்து தண்டிக்க முடியும். அதன் அடிப்படையில் சி.சி.டி.வி. கேமரா அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. படிப்படியாக எல்லா மின்சார ரயில்களிலும் கேமரா பொருத்துவதன் மூலம் பெண்கள் பாதுகாப்பு மேலும் பலப்படுத்த முடியும் என்று ரயில்வே துறை கருதுகிறது.

;