districts

img

சாதி ரீதியாக இழிவு செய்த பேராசிரியரை கைது செய்க! பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, செப். 9 - சாதி ரீதியாக மாண வர்களிடம் பேசிய தமிழ்த்துறை பேராசிரியரை கைது செய்ய வலியுறுத்தி வெள்ளியன்று (நவ.9) பச்சையப்பன் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். சென்னை பச்சை யப்பன் கல்லூரி தமிழ்த்துறை தலைவராக இருப்பவர் அனுராதா.  மாணவர்களின் சாதி பெயரை குறிப்பிட்டு, ஒரு மாணவருடன் அவர் பேசிய உரையாடல் வெளியானது. இதனையடுத்து அனுராதா மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாண வர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வலி யுறுத்தின. கல்லூரியின் செய லாளர் துரைக்கண்ணு, பேராசிரியர் அனுராதாவை 2 மாதம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை ஏற்க மறுத்து மாண வர்கள் இந்த ஆர்ப்பாட் டத்தை நடத்தினர். அப்போது செய்தி யாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் மிருதுளா, “கல்லூரி நிர்வாகம் பெயரளவிற்கு ஒரு குழு அமைத்து, பேராசிரியரை 2 மாதம் தற்காலிக நீக்கம் செய்துள்ளது. சாதிய வன்மத்தோடு அணுகும் பேராசிரியரை கல்லூரி நிர்வாகம் பாதுகாக்கிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்கு பதிந்துள்ள நிலையில், பேராசிரியரை கைது செய்ய வேண்டும்; கல்லூரி நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும்” என்றார். இப்போராட்டத்தில் மாவட்டத் தலைவர் அருண்குமார், மாநிலக்குழு உறுப்பினர் தமிழ், மாவட்ட துணைத் தலைவர் சஞ்சய் உள்ளிட்டோர் பேசினர்.

;