districts

img

மாற்றுப்பணி வழங்க கோரி பேருந்து பணிமனைகளில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

சென்னை, செப். 20 - பணிக்கு வந்தும் வேலை வழங்காமல் திருப்பி அனுப்பப்படும் தொழிலாளர்களுக்கு மாற்று பணி வழங்க கோரி செவ்வாயன்று (செப்.20) பணிமனைகளில் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மாநகர் போக்குவரத்து கழகத்தில் 500க்கும் மேற்பட்ட ஓட்டுநர் பணி யிடங்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் நிர்வாகம்  திட்டமிட்டபடி  பேருந்துகளை இயக்க முடியவில்லை. எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளை நாட்-ரன் செய்து, சாதாரண கட்டண பேருந்துகளை இயக்க தொழிலாளர்களை நிர்வாகம் நிர்பந்திக்கிறது. இதனால் 300க்கும் மேற்பட்ட ஓட்டுநர், நடத்து நர்கள் பணிக்கு வந்தும், வேலையின்றி திரும்பி செல்கின்றனர். இதனால் ஒரு தொழிலாளிக்கு மாதத் தில் 10 நாட்கள் வரை ஊதிய இழப்பு ஏற்படு கிறது. இதுபோன்று பணி கிடைக்காத தொழி லாளர்களுக்கு மாற்றுப்பணி அல்லது பயிற்சி வகுப்புக்கு அனுப்பி வருகை பதிவை உறுதி செய்ய வலி யுறுத்தி மேலாண்மை இயக்குநருக்கு சிஐடியு கடிதம் அனுப்பி உள்ளது. இந்நிலையில் தாம்பரம் பணிமனையில் சங்கத்தின் தலைவர் ஆர்.துரையும், கே.கே.நகர் பணிமனையில் பொதுச் செயலாளர் வி.தயானந்தமும், அயனா வரம் பணிமனையில் பொரு ளாளர் ஏ.ஆர்.பாலாஜியும் கலந்து கொண்டனர்.

;