தகவல் தொழில்நுட்பத்துறையில் போட்டியிலிருந்து வெகு தொலைவில் தடையற்ற சந்தை இடத்தை உருவாக்கி வெற்றிகரமாக செயல்படும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசும் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதரகமும் இணைந்து ப்ளூ ஓஷன் விருதுகளை வழங்கின. சென்னையில் நடைபெற்ற யுமேஜின் சர்வதேச மாநாட்டின் ஒருபகுதியாக வழங்கப்பட்ட இந்த விருதை தமிழ்நாட்டைச் சார்ந்த மூன்று நிறுவனங்கள் பெற்றன. இந்த நிகழ்ச்சியில் மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் லீசே தால்போட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.