டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஊத்துக்கோட்டை பகுதி குழு சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் சி.பாலச்சந்திரபோஸ், மாவட்ட நிர்வாகிகள் டி.மதன், எஸ்.தேவேந்திரன், எஸ்.கலையரசன், பகுதி நிர்வாகிகள் சந்துரு, சிவனேசன், விக்கி, கிளைச் செயலாளர் கவியரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.