districts

img

சுதந்திரப் போராட்ட வரலாற்றை மறைக்கிறது பாஜக: கே.எஸ்.அழகிரி

விழுப்புரம், ஆக. 13- விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சனிக்கிழமை நடை பெற்ற சுதந்திர தின பவள விழா பாதயாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ்  பங்கேற்ற கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  செய்தியாளர்களிடம் பேசுகையில், நாட்டின் விடுதலைக்காக காங்கிரஸ், இடதுசாரி கட்சி தலைவர்கள் மட்டுமே பாடுபட்டனர் என்றார். பாஜகவின் முன்னோடி யான ஜன சங்கமோ, ஆர்.எஸ்.எஸ். அமைப்போ சுதந்திரத்துக் காக போராடவில்லை. நாடு சுதந்திரம் அடைந்தப்பின் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலு வலகத்தில் காவிக் கொடியை ஏற்றினர். பின்னர் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது அங்கு சென்று தேசியக் கொடியை ஏற்றினார் என்றும் கூறினார். நாடு விடுதலை அடைந்து இத்தனை ஆண்டு காலமாகியும் பாஜக சுதந்திர தினத்தை கொண்டாடவில்லை ஏன்? என்று கேள்வி எழுப்பிய அழகிரி, இப்போது தேசிய கொடியை ஏற்றும் பாஜக, அதன் பின்னால் இருக்கும் தியாகத்தை மறைக்க முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். தமிழக மக்கள் மீதுஆளுநர் பிரியமாக இருப்பதாகவும், தமிழர்க ளுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்ப தாகவும் கூறும் ரஜினி, ஆளுநரிடம் என்ன பேசி னோம் என்பதை தெரிவிக்க மாட்டேன் என்று கூறுவது சரியானது அல்ல என்றும்  தமிழக மக்களின் நலனில் ஆளுநருக்கு அக்கறை இருந்தால் நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவில் கையெழுத்திட ஆளுருக்கு ரஜினி அழுத்தம் கொடுத்தி ருந்தால் தமிழக அரசியல் கட்சிகள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் என்றும் அழகிரி தெரிவித்தார்.

;