districts

img

மழையால் சென்னை திருவள்ளூர் இடையே புறநகர் ரயில் சேவை பாதிப்பு

சென்னை, மே 10- சென்னையில் பெய்த திடீர் மழையால் சிக்னல்  கோளாறு ஏற்பட்டு சென்னை  திருவள்ளூர் இடையே புறநகர் ரயில் சேவை பாதித்தது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் செவ்வாயன்று அதிகாலை முதலே லேசானது முதல் பலத்த மழை பெய்த வரு கிறது. இதனால் சென்னை  வியாசர்பாடி - வில்லி வாக்கம் இடையில் உயர்மின்  அழுத்த மின் வடத்தில் கோளாறு ஏற்பட்டு அதன் காரணமாக சென்னை- திருவள்ளூர் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சிக்னல் கோளாறு காரண மாக புறநகர் ரயில்கள் ஆங் காங்கே நின்று சென்றன. காலை நேரம் என்பதால் புறநகர் ரயில் மூலம் திரு வள்ளூர், ஆவடி, அம்பத்தூர்  பகுதியிலிருந்து சென் னைக்கு வேலைக்கு வரும் அரசு மற்றும் தனியார் நிறு வன ஊழியர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். சிலர் ரயிலிகளிலிருந்து இறங்கி தண்ட வாளங்களில் நடந்து  சென்று, அருகில் இருக்கும்  சாலைகளுக்கு சென்று,  ஆட்டோ மூலம் காலதாம தமாக அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்பட்டன.