districts

img

பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

3வது ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை அடிப்படையில் பென்சன் மாற்றம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மேகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில துணை தலைவர் மாணிக்க மூர்த்தி, மாநில சிறப்பு அழைப்பாளர் முத்துகுமரசாமி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில துணை தலைவர் சம்பந்தம், மாவட்ட செயலாளர் சவுந்தரராஜன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.