விழுப்புரம்,ஜூன் 25- விழுப்புரம் நகராட்சி புதிய பேருந்து நிலைய வளாக சுற்றுச்சுவர்களில் என் நகரம் - என் பெருமை” என்ற நிலையை பொதுமக்கள் உருவாக்கும் வகையில், பல்வேறு வகையிலான விழிப்புணர்வு குறித்த சுவர் ஓவியங்கள் வரையும் பணியை தூய இருதய மேல்நிலைப்பள்ளியினைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டு ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் த.மோகன், “ நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்றார். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.