districts

img

சவீதா பல் மருத்துவ கல்லூரியில் பல்துறை ஆராய்ச்சி மாநாடு

சென்னை, ஜூன் 20-

       ‘ஸ்டார் மாநாடு’ என்னும் பெயரில் பல்துறை வருடாந்திர ஆராய்ச்சி மாநாட்டை சவீதா பல் மருத்துவ கல்லூரி ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

      இதன் 10வது ‘ஸ்டார் மாநாடு 2023’ இக்கல்லூரியில் நடை பெற்றது.   இதில் தேசிய பாரம்பரிய மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஐசி எம்ஆர் இயக்கு னர் டாக்டர் சுபர்னா, ஒன் ஹெல்த் அன்ட் ஜூனோசிஸ் தொழில்நுட்ப அதி காரி டாக்டர் பிரேஜித் நம்பியார், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழககத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷையன், தேசிய சித்தா நிறுவனத்தின் இயக்குநர் மீனா குமாரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினர்.  

     இந்த மாநாட்டில் 3217 ஆராய்ச்சி போஸ்டர்கள் இளங்கலை மற்றும் முது கலை மாணவர்களால் காட்சிப்படுத்தப் பட்டன. ஒட்டுமொத்தமாக சிறந்த போஸ்டர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. உலகில் ஒரு பல் மருத்துவ கல்லூரியில் அதிகபட்ச அறிவியல் விளக்கக்காட்சிகளை" காட்சிப்படுத்தி உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளது.