districts

img

பல் குத்தும் குச்சியில் கலைப்பொருட்கள் கலைஞருக்கு அறிவியல் இயக்கம் பாராட்டு

திருவள்ளூர், ஜன 2 - பழவேற்காடு அருகில் உள்ள நடுவூர் மாதா குப்பத்தை சேர்ந்த இளைஞர் பினோ ஷாஜான். பல் குத்தும் குச்சியை வைத்து தாஜ்மஹால், குதுப்பினார், லண்டன் மேம்பாலம், லைட்ஹவுஸ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வடிவங்களை உருவாக்கியுள்ளார். சாதாரண குடும்ப பின்னனியிலிருந்து வந்துள்ள இளைஞர். பழவேற்காடு லைட்டவுஸ் அருகில் தன் படைப்புகளை கண்காட்சிக்கு வைத்துள்ளார். ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்து வருகின்றனர். இதனையொட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் எஸ்.மோசஸ்பிரபு, மாவட்ட துணை நிர்வாகிகள் மோகன், ஜெய நாராயணன், வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.மதன், பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் ஆகியோர் சிற்பக்கலைஞர் பினோ ஷாஜகானை பாராட்டி புத்தகங்களை வழங்கினர்.