districts

img

ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் திறப்பு

திருவண்ணாமலை,ஜன.20- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், ஆரணி கோட்டத்திற்கு என  புதிதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ரூ.192.95 இலட்சம் மதிப்பீட்டிலும், வரு வாய் கோட்டாட்சியர் குடியிகுப்பு ரூ.35.47 இலட்சம் மதிப்பீட்டி லும் ஆக மொத்தம் ரூ.2.28 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சென்னை தலைமை செயலகத்தில் ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டடம் மற்றும் குடியிருப்பு கட்டடத்தினை காணொலிக்காட்சி வாயி லாக நேற்று (ஜன 19) திறந்து வைத்தார். அதை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத்தலை வர் கு.பிச்சாண்டி ஆரணி வருவாய் கோட்டாட்சி யார்அலுவலகத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்ட டத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முரு கேஷ்,  ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.விஷ்ணு பிரசாத், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்), ஓ.ஜோதி (செய்யார்), மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் இரா.க.கவிதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.