சென்னை, ஆக. 5-
சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மலேசியா நாட்டில் 3ஆவது சர்வதேச சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, இங்கிலாந்து, கனடா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 250 வீரர்கள் கலந்து கொண்டனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவொற்றியூர் பகுதிச் செய லாளர் கஸ்தூரி சிபிஎம் உறுப்பினர் ஜெ.டேவிட் ஆகியோரின் மகள் டி.சாதனா (13) இதில் கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வொற்றியூர் பகுதிகுழு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.ஜெயராமன், எஸ்.பாக்கிய லட்சுமி, பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.செல்வ குமாரி பகுதிக்குழு உறுப்பினர்கள் கே.வெங்கடய்யா, அலமேலு ஆகியோர் வெற்றி பெற்ற சாதனாவுக்கு நினைவு பரிசு களை வழங்கினர்.