districts

img

பாராட்டு விழா

சென்னை அயன்புரத்தில் சிஐடியு நடத்தும் நிர்மல் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் (டிஆர்இயூ) ஒர்க்ஷாப் டிவிஷன் தொழிலாளர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் பாராட்டு விழா செயல் தலைவர் அ.ஜானகிராமன் தலைமையில் பள்ளி வளாகத்தில் புதனன்று (நவ. 30) நடைபெற்றது. சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கலந்துகொண்டு நன்கொடைகளை பெற்றுக் கொண்டு வாழ்த்திப் பேசினார். இதில் ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் பா.ராஜாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.