புதுச்சேரி, மே 15-
புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் முதுநிலை செவிலியர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்.எஸ்.சி அலைடு ஹெல்த் சயின்ஸ் பாடப்பிரிவுகள் 23, எம்.எஸ்.சி செவிலியர் 31, எம்.பி.எஸ் 34, பி.பி.டி.என் 19, இதர பட்ட மேற்படிப்புகள் 12 என மொத்தம் 119 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைனில் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த கல்வியண்டுக்கான நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 2ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடை பெறுகிறது.
ஜூன் 14 ஆம் தேதி மாலை 4.30 மணி வரை மாணவர்கள் ஜிப்மர் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை ஜூன் 23ஆம் தேதி காலை 11 மணி முதல் ஜூலை 2ஆம் தேதி காலை 8 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம்.
நுழைவுத்தேர்வு புதுவை, பெங்களூரு, சென்னை உட்பட 10 நகரங்களில் நடத்தப்படுகிறது. தேர்வு முடிவு ஜூலை 17ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். இந்த பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விப ரங்களை ஜிப்மர் இணையதளத்தில் பார்வையிடலாம் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.