ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட் மற்றும் புதுச்சேரி மாநில அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து முத்தியால் பேட்டை மார்க்கெட் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கொளஞ்சியப்பன், சீனுவாசன், பிரபுராஜ், கலியமூர்த்தி, சத்தியா மாநிலக்குழு உறுப்பினர்கள் சரவணன், தாட்சாயினி, சஞ்செய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.