districts

img

வாலிபர் சங்கத்தின் சார்பில் போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பெரணமல்லூர் கிளை சார்பில், போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் அண்ணா சிலை அருகே செயலாளர் சுந்தர்ராஜி தலைமையில் நடைபெற்றது. சமூக செயற்பாட்டாளர் இரா.ராஜசேகரன், பேரூராட்சி கவுன்சிலர் மா.கௌதம் முத்து, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பெரணமல்லூர் சேகரன், கட்டுமான சங்க செயலாளர் பி.கே.முருகன், தமுஎகச மாவட்டத் தலைவர் நா.முத்துவேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.