சென்னை.பிப்.2 எல்.ஐ.சி. இந்தியாவின் பென்ஷன் திட்டங்களான ஜீவன் அக்ஷய் மற்றும் நியூ ஜீவன் சாந்தி ஆகிய வற்றில் ஆன்யுடி விகி தங்கள் திருத்திய மைக்கப் பட்டுள்ளன. இத்திட்டங்களின் மாற்றி யமைக்கப்பட்ட ஆன்யுடி விகிதங்கள் பிப்ரவரி முதல் பெறப்படும் பாலிசிகளுக்கு கிடைக்கும். நியூ ஜீவன் சாந்தி திட்டத்தில் உள்ள இரண்டு ஆன்யுடி தேர்வுக ளிலும் கிடைக்கும் ஆன்யுடி தொகையை எல்.ஐ.சி. வலைதளத்தில் உள்ள கால்குலேட்டர் மற்றும் எல்.ஐ.சி. செயலிகளின் மூலம் கணக்கிட்டுக் கொள்ள லாம். ஆன்யுடி விகிதத்தில் திருத்தம் செய்யப்பட்ட எல்.ஐ.சி.யின் ஜீவன் அக்ஷய் பாலிசியை நடப்பில் உள்ள விற்பனை வழிமுறைக ளோடு எல்.ஐ.சி.யின் புதிய விற்பனை வழியான பொதுமக்கள் சேவை மையங்கள் மூலமும் பெற லாம். இத்திட்டம் ஆன் லைன் மற்றும் ஆப்லைனில் கிடைக்கும். மேலும் விவரங்களை www.licindia.in வலை தளத்தில் பெறலாம். அல்லது எல்.ஐ.சி. கிளையை தொடர்பு கொள்ளலாம்.