சென்னை, ஜூலை 27- மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் (எம்.பி.எல்) இங்கிலாந்தை தளமாகக் கொண்ட எகானிக் டெக்னால ஜிஸூடன் நீண்ட கால ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது. உலகளாவிய பாலியோல் சந்தையில் சுற்றுச் சூழலுக்கு உகந்த, சி.ஓ.2 கொண்ட பாலியோல்களை அறிமுகப்படுத்த இந்த ஒப்பந்தத்தம் வகை செய்கிறது. நீண்ட நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் எம் பி எல் பொருளாதார செயல்பாடுகளுக்கான தொடக்கமாக இது அமைந்துள்ளது. இது எம் பி எல் ஆலை 1 இல் உள்ள 1,300 லிட்டர் உலையில் இரண்டு வருட செயல்முறை விளக்கத்தை கொண்டிருக்கும். அடுத்த மூன்று வருடங்கள் எம் பி எல்- இன் 12,000-திற்கும் அதிகமான உலைகளின் தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும்,சிஓ 2 கொண்ட பாலியோல்களை வணிகமய மாக்கவும் செலவிடப்படும் என்று எம்.பி.எல்., தலைவரும், ஏ.எம். இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸின் நிறுவனர்-தலை வருமான அஷ்வின் முத்தையா தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப உற்பத்தி செயல்முறைக்கு குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அவசியமா கும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பசுமையான தயாரிப்பை வழங்குவதோடு, பூமியிலிருந்து நிலக்கரி போன்ற எரிபொருட்களை எடுப்பதை தவிர்க்கும் வகை யில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது என்று எம் பி எல் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.