districts

சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு இழப்பீடு

சென்னை, ஏப். 18 - சேவை குறைபாட்டால் பணத்தை இழந்த  வாடிக்கையாளருக்கு ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஏர்டெல் நிறுவனம் இழப்பீடு வழங்க  நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தர விட்டுள்ளது. ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெய்டு செல்போன் எண்ணை சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த ஜெ.யேசுதயன் என்பவர் பயன்படுத்தி வந்தார். யேசுதயன் கோரிக்கை வைக்காமலேயே 2012ம் ஆண்டு செல்போன் சேவை ரத்து செய்யப் பட்டது. இதுகுறித்து புகார் அளித்தபோது போலியான குறுஞ்செய்தி என கூறிய ஏர்டெல், புதிய சிம்கார்டு பெறுமாறு அறி வுறுத்தியது. அந்த எண் முடக்கப்பட்ட நேரத்தில் சென்னை தேனாம்பேட்டை ஐசிஐசிஐ வங்கி யில் உள்ள அவரது கணக்கிலிருந்து 4 லட்சத்து  89 ஆயிரம் ரூபாய் அவருக்கு தொடர் பில்லாத நான்கு கணக்குகளுக்கு மாற்றப் பட்டுள்ளது. பணம் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து ஐசிஐசிஐ வங்கி மற்றும் காவல் துறையிடம் புகார் அளித்தார். சேவை குறை பாடு குறித்து ஐசிஐசிஐ மற்றும் ஏர்டெல் ஆகியவற்றிற்கு எதிராக சென்னை தெற்கு  மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தி லும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஆணைய தலை வர் ஆர்.வி.ஆர்.தீனதயாளன், உறுப்பினர் டி.வினோத்குமார் ஆகியோர், சேவை குறை பாடு இருந்ததை உறுதி செய்தனர். அதனடிப் படையில், மனுதாரர் இழந்த தொகை  4.89 லட்சம் ரூபாயை 9 விழுக்காடு வட்டியுடனும், மன உளைச்சலுக்கான இழப் பீடாக 2 லட்சம் ரூபாயையும், வழக்கு செலவுத் தொகையாக 10 ஆயிரம் ரூபாயை யும்  வழங்க வேண்டும். இந்த தொகைகளை  மூன்று மாதங்களுக்குள் வழங்க வேண்டு மென ஐசிஐசிஐ மற்றும் ஏர்டெல் நிறுவனத் திற்கு உத்தரவிட்டனர்.

;