districts

img

குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை

குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் புத்தூர் நரசிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடத்தை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு அணைக்கட்டு ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன், திட்ட அலுவலர் ஊரக வளர்ச்சி முகமை  க. ஆர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் ராகப்பிரியா சீனிவாசன் உடனிருந்தனர்.