சென்னை.பிப்.25 கேக் உள்ளிட்ட பேக்கரி உணவுகள் தயாரிப்பு வல்லுனரான பூஜா திங்ராவின் பயிற்சி வகுப்பு சென்னை வேளச்சேயில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி உணவு பிரியர்கள் மற்றும் ஆர்வமுள்ள சமையல் வல்லுனர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. பேக்கிங் கலையில் இந்தியாவின் முன்னணி நிபுணர்களில் ஒருவராக திகழும் பூஜா திங்ராவிடம் இருந்து பலவகையான பிஸ்கட்டுகள் தயாரிப்பு குறித்து அறிந்து கொண்டது அவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. பூஜா திங்ரா, மாஸ்டர்செப் இந்தியா இந்தி நிகழ்ச்சியின் முன்னாள் நடுவர் ஆவார்.