districts

img

அண்ணாமலை பல்கலைக் கழக நிறுவனர் 90 ஆம் ஆண்டு விழா

சிதம்பரம், அக்.4- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிறுவனர் 90 ஆவது ஆண்டு நிறுவனர் நாள் விழா மற்றும் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராம.கதிரேசன் தலைமை தாங்கினார்.  இதில் சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பெங்களூரு டெசால்வ்ஸ் நிறுவனத் தலைவர் ப.வீரப்பன் பல்கலைக்கழக பதிவாளர் சிங்கார வேல், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், தொலை தூரக் கல்வி இயக்குநர். பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள். புல முதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.