districts

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சிலேயே 9 பேர் உயிரிழப்பு

சென்னை, மே 13- சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத  காரணத்தால் ஆம்புலன்சிலேயே நோயாளி கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் நிரம்பியதால், மருத்துவமனை வளாகத்திற்குள்ளும், வெளியிலும் கடந்த  சில நாட்களாகவே ஏராளமான ஆம்பு லன்சுகள் கொரோனா தொற்று பாதித்த வர்களுடன் வரிசையில் அணிவகுத்து நிற்கும்  நிலை ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே அனு மதிக்கப்பட்ட நோயாளி டிஸ்சார்ஜ் ஆனால் உடனே ஆம்புலன்சில் இருக்கும் நோயாளி உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர் ஆம்புலன்சுகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியுடன் நோயாளிகள் சுவா சித்து கொண்டிருந்தனர். எப்படியாவது மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைத்து விடாதா என்ற ஏக்கத்தில் உறவினர்களும் தவிப்புடன் இருந்தனர். இந்நிலையில் அதில் சில ஆம்புலன்சுகளில் சிலிண்டர்களில் இருந்த ஆக்சிஜன் திடீரென தீர்ந்து போனது.

 இதனால் சுவாசம் தடைபட்டு கொரோனா நோயாளிகள் மூச்சுவிட சிரமப்பட்டுள்ளனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் உதவி யாளர்களும், மருத்துவ பணியாளர்களும் நோயாளிகளை காப்பாற்ற தொடர்ந்து போராடியுள்ளனர். ஆனால் புதனன்று முத லில் 4 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரி ழந்தனர். பின்னர் 6 மணிக்கு மேல் மேலும் 2 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் வியாழனன்று (மே 13) மேலும் 3 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத கார ணத்தால் ஆம்புலன்சிலேயே நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 6 பேர் இறந்த நிலையில்  வியாழனன்று மேலும் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தனியார் மருத்துவமனையில் இருந்து தொற்று பாதித்தவர்களை கடைசி நேரத்தில்  இங்கு அனுமதிக்க கொண்டு வருவதால் தான் உயிரிழப்பு ஏற்படுவதாக இந்து அறநிலை யத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

;