districts

img

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 84ஆவது பட்டமளிப்பு விழா

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 84ஆவது பட்டமளிப்பு விழா திங்களன்று (ஏப். 18) நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக வேந்தர் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு 1,238 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும் தொலைதூர கல்வி மற்றும் நேரடியாக பயின்ற 1,22,701 பேருக்கு பட்டங்கள் வழங்க ஒப்புதல் வழங்கினார். இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், பல்கலைக்கழக துணைவேந்தர் இராம.கதிரேசன், பதிவாளர் சீதாராமன்,  மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.