districts

img

சும்மா கிடக்கும் 250 ஆம்புலன்சுகள்

பூந்தமல்லி,மே 31- கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் கால்நடை ஆம்புலன்சுகள் வாங்க  ஒன்றிய அரசு கடந்த 2021-ம் ஆண்டு ரூ.39 கோடி நிதி ஒதுக்கியது.  ஒரு லட்சம் கால்நடை களுக்கு ஒரு ஆம்புலன்சு என்ற வீதத்தில் இதனை  செயல்படுத்த திட்ட மிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநில கால்நடை பராமரிப்பு துறை கடந்த ஆண்டு 250 கால்நடை ஆம்புலன்சுகளை வாங்கி யது. இந்த ஆம்புலன்சுகள் தற்போது பூந்தமல்லியில் உள்ள ஒரு யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த நடமாடும் கால்நடை மருத்துவ ஆம்புலன்சு இன்னமும் பயன்பாட்டுக்கு வராமல் அங்கேயே உள்ளது.  இது 100 விழுக்காடு ஒன்றிய அரசின் நிதி உதவி பெற்றது என்பதால் ஆம்புலன்சில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டுவதா? அல்லது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப் படத்தை ஒட்டுவதா என்ற சர்ச்சை எழுந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தை கொடியசைத்து தொடங்கி  வைப்பவர் யார்? என்றும் கேள்வி எழுந்து உள்ளது.  இதன் காரணமாக 250 கால்நடை ஆம்புலன் சுகளும் யார்டிலேயே கடந்த 5 மாதமாக பயன் பாட்டுக்கு வராமல் உள்ளன.   கால்நடைகள் பாதிக்கப் பட்டால் 1962- என்ற எண்ணிற்கு அழைப்பு விடுக்கவேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

;