மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட சென்னை செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக பணியாற்றி மறைந்த தோழர் எஸ்.வி.எஸ்.மணியின் 15ம் ஆண்டு நினைவு தினம் செவ்வாயன்று (ஜன.21) அனுசரிக்கப்பட்டது. கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.