திருவள்ளூர், பிப். 5- பழவேற்காட்டில் வெறிநாய்கள் கடித்து 15 பேர் மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பழவேற்காடு பகுதியில் ஏராளமான இறைச்சி மற்றும் மீன் கடைகள் உள்ளன. இந்த இறைச்சி கழிவுகளை பழவேற்காடு அருகே உள்ள குளத்து மேடு தோனிரேவு கிராமங்களுக்கு செல்லும் வழியில் கொட்டி விடுவதால் அங்கு ஏராளமான நாய்கள் அதனை உண்பதற்காக ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டு வெறி பிடித்து அலைகின்றன. மேலும் அந்த வழி யாகச் செல்லும் மக்களை அவ்வப்போது கடித்து விடுகிறது. இந்நிலையில் திங்களன்று மட்டும் 5 குழந்தைகள் உட்பட 15 பேரை வெறி நாய்கள் கடித்துள்ளது. அனை வரும் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மக்கள் அந்த சாலையை கடந்து செல்லவே அச்சப்படுகிறனர். இதற்கிடையே பழவேற்காடு அரசு மருத்துவமனையில் வெறி நாய் கடிக்கு மருந்து இல்லை என்று கூறப்படுகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாயை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.