districts

img

128 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்

சென்னை,ஜூலை 24 - சென்னையில் ஒரே நாளில் 320  மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி பகுதியில் மாதத்தின் 2 மற்றும் 4வது சனிக் கிழமைகளில் பூங்காக்கள், பள்ளி வளாகங்கள், பேருந்து நிறுத்தங்கள், மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் உள்ள அமைவிடங்களில் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, ஞாயிறன்று (ஜூலை 23) தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. நீர்நிலைகளின் அருகில் உள்ள திடக்கழிவுகள் மற்றும் கட்டிட கழிவுகளை அகற்றுதல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 166 நீர் நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட பணி யின் வாயிலாக 128 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டது. 602 மரக்கன்றுகள் நடப்பட்டன. பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் இதர இடங்களில் 192 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவு கள், கழிவுகள் அகற்றப் பட்டுள்ளன. பொது இடங்கள் மற்றும் சாலை மையத்தடுப்புகளில் 916 மரக்கன்றுகள் நடப் பட்டுள்ளன. இவ்வாறு சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.