districts

மதுரை முக்கிய செய்திகள்

இன்று இளைஞர் திறன் திருவிழா

நாகர்கோவில், டிச.01-         இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக திறன் பயிற்சியளிக்கும் அரசுத் துறைகளையும், தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, வட்டாரங்களில் இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இளைஞர்கள்  அதிக வேலை வாய்ப்புள்ள தொழில்களை  பற்றி அறிந்து கொள்வதோடு, திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் தகவல்களையும் ஒருங்கே பெறுவதற்கும், திறன் பயிற்சி பெறுவதற்கும் இந்த திறன் திருவிழாக்கள் பேரூதவியாக அமையும். கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் (DDU-GKY) கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 45 வயது வரையுள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி வழங்கி வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கும்  பொருட்டு இளைஞர் திறன் திருவிழா குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய வட்டார இயக்க மேலாண்மை அலகில் வைத்து வரும் 02.12.2022 அன்று (வெள்ளிக் கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 5  வரை நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்தார்.

12 ஆண்டுகளாக தேடப்பட்ட  போக்சோ குற்றவாளி கைது

களியக்காவிளை,டிச.1 களியக்காவிளை அருகே  இஞ்சிவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் கூலித்தொழிலாளி   கஞ்சா போதை க்கு அடிமையானவர். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு கஞ்சா போதையில் அதே ஊரை சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தலைமறைவாகி யுள்ளான். இது குறித்து  இளம் பெண் பாறசாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து போலீசார் ஸ்டாலின் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவனை தேடிவந்தனர்.   கடந்த 12 வருடங்களாக ஸ்டாலினை கைது செய்ய முடியவில்லை.  இந்த நிலையில் ஸ்டாலின் தனது சொந்த ஊரான இஞ்சிவிளையில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பாறசாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜிதின் ஏ.எஸ்.ஐ ஜாண் தலை மையில் போலீசார் இஞ்சிவிளை பகுதியில் வைத்து ஸ்டா லினை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால் ஸ்டாலின்  ஏ.எஸ்.ஐ  ஜாண் தலையில், தான் மறைத்து வைத்திருந்த கம்பியால் தாக்கி விட்டு தப்ப முயன்றார். ஆயினும் போலீசார்  ஸ்டாலினை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கூடங்குளம் 2-ஆவது  அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்

திருநெல்வேலி, டிச. 1- டர்பைனில் ஏற்பட்ட பழுது காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. மேலும் 4 அணு உலைகளின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இரண்டா வது அணு உலையின் டர்பைனில் ஏற்பட்ட பழுது கார ணமாக புதன்கிழமை 10.45 மணியளவில் திடீ ரென்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்படைந்தது.  டர்பைனில் ஏற்பட்ட பழுதை அணுமின் நிலைய விஞ்ஞானிகளும், ஊழியர்களும் சீரமைக்கும் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில்  டர்பைனில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்படும் என அணுமின் நிலைய வட்டாரம் தெரிவிக்கிறது. தற்போது முதலாவது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது  குறிப்பிடத்தக்கது.

பி.எம்.கிசான் பயனாளிகள்  ஆதார் எண்ணை உறுதி செய்ய வேண்டுகோள்

தூத்துக்குடி, டிச.01 தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டமானது பிப்ரவரி 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உத வித் தொகையாக நான்கு மாதத் திற்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000 மூன்று தவணை களில், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக ஒன்றிய அரசினால் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொடர்ந்து பயன்பெறுவதற்கு ஆதார் எண் உறுதி செய்வது அவசியம். நடப் பாண்டில், 13-வது தவணையாக, அதாவது டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 முடிய உள்ள காலத்திற் கான தவணைத் தொகை பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப் படும் என ஒன்றிய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவோ ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம். முதல் முறையில் உங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று, தனது பெயரை பி.எம்.கிசான் இணையதளத்தில் e-KYC செய்ய வேண்டுமென்று கோரும் நிலையில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். இரண்டாவது முறையில் உங்க ளது கைபேசியில் உள்ள இணைய தள வசதியை பயன்படுத்தி,  http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். எனவே, பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இது நாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால், மேற் காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக கூடுதல் விவரம் ஏதும் அறிய விரும்பினால், உங்கள் வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள லாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி, டிச. 01 ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்க ளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த  பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,  மத்திய அரசு கல்வி நிறுவ னங்கள் ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற் படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர்  மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2022-23ம்  கல்வி ஆண்டிற்கான  கல்வி உதவித்தொகை புதியது  (Fresh applications)  விண்ணப் பிப்பதற்கான படிவங்கள் வரவேற்கப் படுகிறது. தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்க ளில் உள்ள மத்திய அரசு கல்வி நிறு வனங்களில் ஐஐடி, ஐஐஎம் , ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழ கங்களில்  பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு  பயிலும் மாணவ, மாணவிய ருக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிக பட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உத வித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள் ளது.

குடும்ப  ஆண்டு  வருமானம் ரூ. 2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். நடப்பு 2022-23 ஆம் கல்வி ஆண்டில் புதியது (Fresh applications)  விண் ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவ, மாணவியர்கள் https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm #scholarshipschemes என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவி றக்கம் செய்து கொள்ளலாம் அல்லது  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். மேற்படி நிதியாண்டிற்கான  கல்வி உதவித்தொகை புதியது விண்ணப் பத்தினை மாணவ/மாணவியர் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் 25.01.2023க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.  கல்வி நிறுவனங்கள் சான் றொப்பத்துடன் தகுதியான விண்ணப் பத்தினை பரிந்துரை செய்து, ஆணை யர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம் சென்னை- 5, தொலை பேசி எண்:044-29515942,  மின்னஞ்சல் முகவரி - tngoviitscholarship@gmail. com என்ற முகவரிக்கு  விண்ணப்படி வங்களை 31.01.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியுள்ள பிவ/மிபிவ/சீம மாணவ/மாணவியர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

கேரளாவுக்கு கடத்த முயன்ற  20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாகர்கோவில், டிச.1- கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே லாரியில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 20 டன் ரேசன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தக்கலை காவல் ஆய்வாளர் நெப்போலியன் தலை மையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தார். தக்கலை அருகே உள்ள கொல்லன்விளை பகுதியில் சென்றபோது, சாலையோரம் சந்தேகப்படும் வகையில் ஒரு கண்டெய்னர் லாரி நின்று கொண்டி ருந்தது. மேலும், லாரியின் வாகன பதிவெண் அழிக்கப் பட்டு இருந்தது. அருகில் நின்ற நபரை அழைத்து விசாரணை நடத்தினர். அதில், அந்த நபர் மார்த் தாண்டத்தை சேர்ந்த மெக்கானிக் என்பதும், லாரி பழுதாகி நிற்பதாக கிடைத்த தகவலின் பேரில் பழுது நீக்க வந்த தாகவும், ஆனால் ஓட்டுநரை காணவில்லை என்றும் கூறினார். இதையடுத்து லாரியின் பின்பக்க கதவை திறந்து பார்த்தபோது, அதில் மூடை மூடையாக ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், அந்த மூடை களில் விருதுநகர் மாவட்டம் வாணிப கழக ஸ்டிக்கர் இருந்தது. இதனால், ரேசன் அரிசி வெளிமாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு குமரி மாவட்டம் வழியாக கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. காவல்துறையினரை பார்த்ததும் ஓட்டுநர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. லாரியுடன் 20 டன் ரேசன் அரிசியை காவல்துறை யினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நாகர்கோவி லில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட லாரியுடன் 20 டன் ரேசன் அரிசியும் ஒப்ப டைக்கப்பட்டது. மேலும், லாரியை பழுது பார்க்க அழைத்த போன் நம்பர் மூலம் லாரியின் ஓட்டுநர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிராம உதவியாளர் பதவிக்கு  8 மையங்களில் எழுத்து தேர்வு 

திருநெல்வேலி, டிச. 1- வருவாய்த்துறையில் காலியாக உள்ள 60 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட இணையவழி மற்றும் வேலைவாய்ப்பகம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் மூலம் அவை சரிபார்க்கப்பட்டு ஏற்கப்பட்டன. அந்த விண்ணப்ப தாரர்களுக்கு எழுத்து தேர்வு வருகிற 4-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி, மானூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அம்பை ஏ.வி.ஆர்.எம்.வி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சேரன் மாதேவி ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, நாங்குநேரி பிரான்சிஸ் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி, ராதாபுரம் புனித அன்னாள் மெட்ரிக்குலேஷன் பள்ளி, திசையன்விளை உலக ரட்சகர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 இடங்களில் தேர்வு நடக்கிறது.  விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதன் அனுமதி சீட்டினை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனுமதி சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்ப தாரர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு எழுத கருப்பு பால்பாயிண்ட் பேனா மட்டும் பயன் படுத்த வேண்டும். அனுமதி சீட்டு மற்றும் பால்பாயிண்ட் பேனா தவிர வேறு எந்த பொருளையும் தேர்வறைக்கு கொண்டு செல்லக்கூடாது. செல்போன், புத்தகங்கள், பை மற்றும் வேறு எந்த சாதனங்களையும் கொண்டு வரக்கூடாது. தேர்வு அறைக்குள் காலை 9.30 மணிக்கு அனுமதிக்கப்படுவார்கள். 9.50 மணிக்கு பின்னர் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த தகவலை, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

நெல்லையில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்

திருநெல்வேலி, டிச. 1- திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் இருந்து திரு வண்ணாமலைக்கு தேவைகேற்ப சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டலம் மற்றும் தூத்துக்குடி மண்டலங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த பேருந்துகள் வருகிற 5-ஆம் தேதி மாலை புறப்பட்டு திருவண்ணாமலைக்கு 6-ந் தேதி காலை செல்லும். பின்னர் 6-ந் தேதி மாலை கார்த்திகை தீபம் ஏற்றிய பின்பு அங்கிருந்து பக்தர்கள் திரும்பி வரும் வகையிலும் இயக்கப்படுகிறது. இத்தகவலை நெல்லை அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

என்சிசி பொன்விழா

தூத்துக்குடி,டிச.1 தூத்துக்குடி திருச்சிலுவை ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் என்சிசி பொன்விழா கொண்டாடப்பட்டது. விழாவில் என்சிசி சுபேதார் மேஜர் கணேசன் மற்றும் ஹவால்தார் மேஜர் ஜெஹாங்கீர் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளியின் தாளாளர் செலின், 1972 ஆம் ஆண்டு  பயின்ற சாரணியர்கள், முந்தைய ஏஎன்ஒ (ANO)க்கள்  மற்றும் முன்னாள் சாரணியர் பங்கேற்றனர். தமிழகத்தின் சிறப்பு குறித்த கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்பட்டன. உடல் உறுப்பு தானம் குறித்து பாலே நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்க ளுக்கும், பொன்விழா கமிட்டியில் அங்கம் வகித்த சாரணி யர்களுக்கும் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. திருச்சிலுவை முத்துகள் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு டி-சர்ட்டுகள் சாரணி யர்களால் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை பாத்திமா மோத்தா உதவியுடன் என்சிசி முதல் அதிகாரி லாலிடா ஜூட் முழு நிகழ்வை யும் ஒருங்கிணைத்து செய்திருந்தார்.

பேருந்து வசதி கேட்டு பள்ளி மாணவர்கள் மறியல்!

தூத்துக்குடி,டிச.1 தூத்துக்குடியில் பேருந்து  வசதி கேட்டு ஊழியர்கள் -மாணவர்கள் கனநீர் ஆலை முன்பு ‘திடீர்’ சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி முத்தையாபுரத்தில் மத்திய அரசின் அணுசக்தி துறைக்கு சொந்தமான கனநீர் ஆலை மற்றும் ஊழி யர்களுக்கான குடியிருப்பு உள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கனநீர் குடி யிருப்பு ஊழியர்களின் ஆலை குழந்தை கள் படிப்பதற்காக பழையகாயல் புல்லா வழி பகுதியில் ஒரு பள்ளி கட்டப்பட்டது. இதையடுத்து முத்தையாபுரம் குடி யிருப்பில் இருந்து புல்லாவழிக்கு மாணவ- மாணவிகளை  பேருந்து மூலம் தினமும் அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் பெற்றோர்கள் இனி தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழை த்து வந்து பின்னர் மீண்டும் அழைத்து செல்ல வேண்டும் எனவும், பள்ளி சார்பில் பேருந்து இயக்கப்படாது என கூறப்பட்ட தாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திர மடைந்த கனநீர் ஆலை அதிகாரிகள், ஊழி யர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வியாழ னன்று காலை கனநீர் ஆலை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது அவர்கள், வழக்கம் போலவே தினமும் பள்ளி சார்பில்பேருந்து மூலம் மாணவ- மாணவிகளை அழைத்து செல்ல வேண்டும் என வலியுறுத்தினர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

தூத்துக்குடி,டிச.1 உடன்குடி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேர் விஷம் குடித்து தற் கொலைக்கு முயன்ற சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள சிறுநாடார்குடியிருப்பு பகு தியை சேர்ந்தவர் ரகுபதி (57). விவசாயி. இவரது மனைவி சத்யவதி (50). இவர்களது மகள் சந்தியா (27). வியாழனன்று காலை வெகு நேரமாகியும் இவர்க ளது வீடு திறக்கப்பட வில்லை. இதனால் சந்தேக மடைந்த அக்கம் பக்கத்தி னர் உள்ளே சென்று பார்த்த போது ரகுபதி, சத்யவதி, சந்தியா ஆகிய 3 பேரும் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர். இதையடுத்து அவர்கள் மூவரையும் மீட்டு திருச் செந்தூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. இதுகுறித்த தகவ லின் பேரில் குலசேகரன்பட்டி னம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தியாவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரிகரசுதன் என்பவ ருடன் திருமணம் நடந்தது தெரியவந்தது. அரிகரசுதன் சென்னை போரூரில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். அங்கு வியாபாரம் சரி யாக இல்லாமல் நஷ்டம் அடைந்ததால் அரிகரசுத னும், சந்தியாவும் ஊருக்கு வந்து விட்டனர். பின்னர் அரி கரசுதன் உடன்குடி அனல் மின் நிலையத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந் நிலையில் அவருக்கும், அவ ரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற் பட்டுள்ளது. இதையடுத்து அரிகர சுதன் மனைவியுடன் கோபித் துக்கொண்டு புதனன்று  சென்னை செல்வதாக கூறி சென்றுள்ளார். இதனால் சந்தியா மற்றும் அவரது குடும்பத்தினர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டது தெரியவந்தது. எனவே இந்த சம்பவத்தில் விரக்தி அடைந்து 3 பேரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என காவல் துறையினர் கருது கிறார்கள்.  இதுதொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.



 

 

;