districts

img

சிவகங்கை நகராட்சியில் 24 மணி நேரத்தில் பிறப்பு -இறப்பு சான்றிதழ்

 சிவகங்கை, ஜூன் 9-  சிவகங்கை நகராட்சியில் சிறப்பான திட்டமான பிறப்பு-இறப்பு பதிவு செய்த  24 மணி நேரத்தில் இல்லம் தேடி சான்றி தழ் வீட்டில் அளிக்கும் திட்டம்  செயல்  படுத்தப்பட்டு வருவதாக நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த் சிவகங்கை யில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  சிவகங்கை நகராட்சியில் புதிய சிறப்பு திட்டமாக பிறப்பு இறப்பு பதிவு  செய்த 24 மணி நேரத்தில் இல்லம் தேடி  சான்றிதல் கிடைக்கிற திட்டத்தை சிவ கங்கை நகராட்சியில் தொடங்கியி ருக்கிறோம். இன்றையதினம் 58 நபர்  களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள் ளது. கடந்த காலங்களில் பதிவு செய்து  நான்கு மாதம் ஐந்து மாதம் ஆறு மாதம் என்று மக்கள் காத்துக்கிடந்தனர்.  .தற்  போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழிகாட்டுதல்படி சிவ கங்கை நகராட்சியில் 24 மணி நேரத்தில் பிறப்பு சான்றிதழ் இறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம் .இத்திட்டத்தால் சாதா ரண ஏழை எளிய மக்கள் காலதாமதம்  இல்லாமல் பிறப்பு இறப்பு சான்றிதழ்  பெறுவதற்கு அதற்குரிய நடவடிக்கை யை சிவகங்கை நகராட்சி நிர்வாகம் எடுத்து செயல்படுத்தி வருகிறோம் என்று நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தெரிவித்தார். நகராட்சி ஆணையர் பாஸ்கரன் ,நகர்மன்ற துணைத்தலைவர் கார்  வண்ணன்,நகர்மன்ற உறுப் பினர்  அயூப்கான் உள்ளிட்டோர் உடனிருந்த னர்.

;