districts

img

அரசாணை 152: அடித்தட்டு மக்களுக்கு சமூக அநீதி திருப்பூர் மாமன்ற கூட்டத்தில் கட்சிகள் எதிர்ப்பு

திருப்பூர், நவ. 16 - தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை 152 அடித்தட்டு மக்கள், படித்த இளைஞர் களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதியாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ் சாட்டியுள்ளது. திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் புதன்கிழமை மேயர் ந.தினேஷ்குமார் தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநக ராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி உள்பட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ர.மணிமேகலை அர சாணை 152 குறித்து உரையாற்றினார். அப் போது அவர் கூறுகையில், திருப்பூர் மாநக ராட்சியில் வேலை செய்யும் தூய்மை பணியா ளர்கள், குடிநீர் பணியாளர்கள், வாகன ஓட்டு நர்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு உள்பட பல்வேறு வகையான அலுவலகப் பணிகளை செய்து வரும் ஊழியர்களின் எதிர்கால வாழ்வையே அரசாணை 152 கேள்விக்கு றியாக்கி உள்ளது. பொது சுகாதாரம் குடிநீர் வழங்கல் பிரிவு, வரி வசூல், தெரு விளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான மாநக ராட்சி பணியிடங்களை தமிழ்நாட்டில் உள்ள  20 மாநகராட்சிகளில் (சென்னை நீங்கலாக) நிரந்தர பணியிட பட்டியலில் இருந்து இந்த அரசாணை 152 நீக்கியுள்ளது. இனிமேல் தூய்மை பணி, ஓட்டுநர், தூய்மைப்பணி மேற்பார்வையாளர், செயல்திறனற்ற பணி யாளர், அலுவலக உதவியாளர் போன்ற பணி களை எல்லாம் அவுட் சோர்சிங் எனப்படும் வெளி முகமை மூலமே செய்ய வேண்டும் எனவும் இந்த அரசாணை குறிப்பிடுகிறது. இது தூய்மைப்பணி உள்பட பல்வேறு பணிகளைச் செய்து வரும் அடித்தட்டு மக்க ளுக்கும், படித்த இளைஞர்களுக்கும் இழைக் கப்பட்டுள்ள சமூக அநீதியாகும். எனவே இந்த அரசாணை 152ஐ ரத்து செய்ய வேண் டும் என்று ர.மணிமேகலை கேட்டுக் கொண் டார்.

இக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் கே.பி.ஜி. செந்தில்கு மார், அரசாணை 152ஐ கடுமையாக விமர்சித் தார். இதே நிலையில் போனால் இனிமேல் மாநகராட்சியில் ஆணையாளர் பணியைத் தவிர வேறு யாருமே நிரந்தரப் பணியா ளர்களாக இருக்க மாட்டார்கள் என்ற நிலையை ஏற்படுத்தி விடுவார்கள். எனவே அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வெளிநடப்புச் செய்வதா கக் கூறி மன்றத்தை விட்டு அவர் வெளியே றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எஸ். ரவிச்சந்திரன் அரசாணை 152-க்கு எதிராக மாற்றுத் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதில், நகர்ப்புற உள்ளாட்சி கட்டமைப்பை முற்றிலும் தனியார்வசம் தள்ளிவிடும் நோக் கம் கொண்டது. தற்போது இத்துறையில் உள்ள நிரந்தரப் பணியாளர்கள் ஓய்வு பெற்ற தும், புதிய பணியாளர்கள் நியமனம் செய்ய இந்த அரசாணை தடை செய்கிறது. சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிக ளையும் நிர்வாக பணியாளர்களையும், தூய்மைப்பணி ஆய்வாளர்கள், வரிவசூல் பிரிவு முழுவதும் தனியாரிடம் மேற்கொள்ள இந்த அரசாணை வழிவகுக்கிறது.

மக்கள் சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகளை அரசு கைகழுவி விட்டு தனியாரி டம் ஒப்படைக்க முயலும் இந்த அரசாணை எண் 152ஐ திரும்பப் பெறுவதோடு, சுகா தார கட்டமைப்பு முழுவதும் அரசின் கட்டுப் பாட்டில் வைப்பதோடு, மேலும் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்வதாக முன்மொழிந்தனர். எனினும் இத்தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள் அர சாணை 152-க்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த மோசமான அரசாணை குறித்து எந்த  கருத்தும் தெரிவிக்கவில்லை. மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் பதில் கூறுகையில், 2014ஆம் ஆண்டு முதலே தனியார்மயம் அமலாகிக் கொண்டிருக்கிறது. எனினும் அரசாணை 152 குறித்து இங்கு வந்த கருத்து களை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வ தாகத் தெரிவித்தார்.