districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

உதகை ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளி தற்கொலை முயற்சி

உதகை, செப்.26- உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் அதிர்ச்சி ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள ஆடு மந்து பகுதியை சேர்ந்த ரங்கசாமி (65). கடந்த ஆக.15 ஆம்  தேதியன்று கடசோலை நடுநிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர  தின நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியை சேர்ந்த கவுன்சிலர் நாகராஜ் உட்பட சிலர் ரங்கசாமியின் சாதி  பெயரை சொல்லி  தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து  கோத்தகிரி சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் ரங்கசாமி புகார் அளித்தார். இதையடுத்து சிஎஸ்ஆர் பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் மனவேதனையடைந்த ரங்கசாமி, திங்க ளன்று காலை உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த போது, கையில் பெட்ரோல் பாட்டில் கொண்டு  வந்து தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த போலீ சார் தடுத்து நிறுத்தி விசாரணைக்கு அழைத்து சென்றனர். இத னால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டுவிட்டரில் மோதல் - 2 பேர் மீது வழக்கு

கோவை, செப்.26- டுவிட்டர் பக்கத்தில் மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்ட 2 பேர் மீது கோவை காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவையில் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பி னர் தொடர்புடைய இடங்களில் மண்ணெண்ணை குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இதனை தடுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும் காவல் துறை சார்பில் இரு பிரி வினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலை தளங்களில் கருத்துக்களை வெளியிடக்கூடாது என அறிவு றுத்தப்பட்டது. இந்நிலையில் கோவையைச் சேர்ந்த பாலு, பிரசாந்த் ஆகியோர் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத் தும் வகையிலும், இரு பிரிவினர் இடையே மோதலை துண்டி  விடும் வகையிலும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.  இதனையடுத்து அவர்கள் மீது கோவை மாநகர குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துறையினர், தகவல் தொழில் நுட் பத்தை தவறாக பயன்படுத்துதல், அவதூறாக பேசுதல் உள் ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெட்ரோல் குண்டு வீச முயன்ற மூவர் கைது

பொள்ளாச்சி, செப்.26- பொள்ளாச்சி குமரன் நகரில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த நபர்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், பெட்ரோல் குண்டு வீச முயன்ற மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி குமரன் நகரில் இந்துத்துவ அமைப்பு களை சார்ந்த நிர்வாகிகளின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 2 நான்கு சக்கர வாகனம், 2 ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தியும்,  வாகனங்களின் மீது டீசலை ஊற்றிவிட்டு தப்பியோடினர். இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளர் தீபா சுஜாதா தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற வந்த விசாரணையில் பொள்ளாச்சியை சேர்ந்த முகமது ரபிக் (26), ரமீஸ் ராஜா (36), மாலிக் (எ) சாதிக் பாஷா (32) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பச்சிளம் குழந்தையை எடுத்து சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்

கோவை, செப்.26- கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந் தையை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்பது காவல் துறை யினர் விசாரணையில் தெரியவந்தது. கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ  பிரிவில், கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த வர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், அன் னூரை சேர்ந்த பெண்ணிற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.  அந்த ஆண் குழந்தையை ஞாயிறன்று மதியம் தொட்டிலில்  வைத்துவிட்டு அந்த பெண் வெளியே சென்றுள்ளார். அப் போது அங்கு வந்த பெண் ஒருவர் திடீரென்று அந்த பச்சிளம் ஆண் குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக வெளியே செல்ல முயன்றார். இதை பார்த்து சந்தேகமடைந்த மருத்துவ மனை காவலாளிகள், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்களிடம் அந்த பெண், அந்த குழந்தை தன் னுடையது என கூறியுள்ளார். இதனிடையே வெளியே சென்ற  குழந்தையின் தாய் திரும்பி வந்தார். அவர், தொட்டிலில் குழந்தை இல்லாததால் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட் டுள்ளார். இதையறிந்த காவலாளிகள் குழந்தையை தூக்கி சென்ற அந்த பெண்ணை தேடிப்பிடித்தனர். இதுகுறித்து பந்தயசாலை காவல் துறையினருக்கு தக வல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை யினர் குழந்தையை தாயிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை  மேற்கொண்டதில், அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. அப்போது அந்த பெண்ணை சுற்றி  போலீசார் மற்றும்  பொதுமக்கள் நிற்பதை கண்ட மூதாட்டி ஒருவர், போலீசாரி டம் அந்த பெண் எனது மகள் ஆரோக்கியமேரி (32) எனவும்,  தாங்கள் கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்தவர்கள் என்றும், எனது மகள் கடந்த 15 வருடமாக மனநலம் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். இதையடுத்து காவல் துறையினர் ஆரோக்கியமேரியை அவரது தாயாரிடம் ஒப்படைத்து, இனி இவ்வாறு நடக்காமல் பார்த்து கொள் ளும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

சூதாட்டம்: 4 பேர் கைது

கோவை, செப்.26- பொள்ளாச்சி, ஆச்சி பட்டி பகுதியில் சூதாட்டம் நடப்பதாக காவல் துறை யினருக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில், பொள் ளாச்சி காவல் உதவி ஆய்வா ளர் நாகராஜன் தலைமையி லான காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப் போது பொள்ளாச்சியை சேர்ந்த நவநீதன் (28), கார்த் திக் (19), சதீஷ் (19), கருப்பு சாமி (40) ஆகியோர் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டது  தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

திருப்பூரில் மின் ஊழியர்கள் போராட்டம்

திருப்பூர், செப். 26 - மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய  உயர்வு நிலுவையை உடனடியாக வழங்க வலியுறுத்தி திருப் பூர் மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன் பாக மின் வாரிய ஊழியர் சங்கத்தினர் திங்களன்று காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக மின்வாரியத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர்  மாதம் முதல் மின்வாரிய தொழிலாளர்களுக்கு வழங்க வேண் டிய ஊதிய உயர்வை  உடனடியாக வழங்க வேண்டும், ஒப்பந்த  அடிப்படையில் பிரிவுகளுக்கு மின் இணைப்பு எண்ணிக்கை யும், வட்டம் மற்றும் மண்டலங்களை உருவாக்குவது தொடர் பாக தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி தீர்வு காணவும், பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருப்பூர் பி.என்.  சாலை மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக இப்போராட்டம் நடைபெற்றது. மின் ஊழியர் மத்திய  அமைப்பின் கிளைத் தலைவர் பி.பாபு தலைமையில் நடை பெற்ற இப்போராட்டத்தில் கிளைச் செயலாளர் ஆர்.நாகரா ஜன், கே.மோகன்தாஸ், ஊழியர் சம்மேளனத்தின் சக்திவேல்,  சதீஷ்சங்கர், நஜீர் அகமது, பொறியாளர் ஐக்கிய சங்கத்தின்  பி.சீனிவாசன், ஆர்.நாகராஜன், ஜனதா சங்கத்தின் சுரேஷ் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

கல்வி, மருத்துவ சேவைகளில்  தனியார்மயம் கைவிட வலியுறுத்தல்

திருப்பூர், செப். 26 – கல்வி, மருத்துவ சேவைத்துறைகளில் தனியார்மய கொள்கைகளை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்  என்று ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கம்  வலியுறுத்தி உள்ளது. ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின்  திருப்பூர் மாவட்ட மாநாடு பல்லடத்தில் சனிக்கிழமை மாவட் டத் தலைவர் மா.நாட்டராயன் தலைமையில் நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் சி.ஜெயப்பிரகாசம் வரவேற்று அறிக்கை தாக்கல் செய்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஜி. கண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் டி.தண்டபாணி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப் பினர் கனகராஜா, ஓய்வுபெற்ற ஆசிரியர் நலச்சங்க நிர்வாகி கள் க.வனமூர்த்தி, மா.பொன்னுச்சாமி, கி.சீரங்கராயன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.  ஒரே தன்மையுள்ள பிரச்சனைகளில் ஓய்வூதியர்கள்  தொடர்ந்த வழக்குகளில் நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பின்  அடிப்படையில் மற்ற ஆசிரியர்களுக்கும் ஆணை வழங்க  வேண்டும், கல்வி, மருத்துவ சேவைகளில் தனியார்மய  கொள்கைகளைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.  இம்மாநாட்டில் மாவட்டத் தலைவராக மா.நாட்ராயன், மாவட்டச் செயலாளராக சி.ஜெயப்பிரகாசம், மாவட்டப் பொருளாளராக ஏ.சுந்தர்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் திரளா னோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் மாநிலப் பொருளாளர்  ஜி.மனோகரன் நிறைவுரை ஆற்றினார். முன்னதாக ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநில நிர் வாகிகள் கே.ஏ.தேவராஜன், செ.நடேசன், நா.நாகப்பன் ஆகி யோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

வாகன விபத்தில் 20 காவலர்கள் காயம்

அவிநாசி, செப். 26 – அவிநாசி அருகே பழங்கரையில் காவலர்கள் வந்த வாக னம் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில், 20 காவலர்கள்  படுகாயமடைந்தனர். கோவையில் கூடுதல் பாதுகாப்புப் பணிக்கு செல்வதற் காக, கடலூரில் இருந்து கோவை நோக்கி 30க்கும் மேற்பட்ட  ஆயுதப்படை காவலர்கள் பயணிகள் வேனில் வந்து கொண்டி ருந்துள்ளனர். அவிநாசி பழங்கரை ரங்காநகர் அருகே வந்த போது, முன்னால்சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி  திடீரென நிறுத்தியதால், காவலர் வாகனம், அந்த லாரியின்  பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காவலர் வாக னத்தை ஓட்டிவந்த முருகன் உள்பட்ட 20 காவலர்கள் காயம டைந்தனர். இவர்கள், அவிநாசி, திருப்பூர் உள்ளிட்ட அரசு  மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இது குறித்து அவிநாசி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும் தப்பியோடிய கண் டெய்னர் லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

அத்திக்கடவு அவிநாசி திட்டம்: விடுபட்ட பகுதிகளுக்கு துணைத் திட்டம் உருவாக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

திருப்பூர், செப். 26 – அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விடு பட்டுள்ள குளம் குட்டைகளுக்கு நீர் நிரப்ப  புதிய துணைத் திட்டம் உருவாக்கி நடைமு றைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் கோரியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப் பூர் வடக்கு ஒன்றியத் தலைவர் ரங்கசாமி, செயலாளர் எஸ்.அப்புசாமி ஆகியோர் இது  தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அளித்த  மனுவில் கூறியிருப்பதாவது: அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் திருப்பூர் ஊராட்சி ஒன்றி யத்தைச் சேர்ந்த கணக்கம்பாளையம், காளி பாளையம், பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பா ளையம், வள்ளிபுரம், தொரவலூர், மேற்கு பதி, சொக்கனூர், பட்டம்பாளையம் மற்றும் பொங்குபாளையம் ஆகிய ஊராட்சிகளில் ஏராளமான குளம், குட்டைகள் சேர்க்கப்படா மல் விடுபட்டுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக  விடுபட்ட குளம், குட்டைகளை இணைத்துக்  கொள்வதாக சொல்லப்பட்டு நடைபெற வில்லை. தற்போது அத்திக்கடவு திட்டத்தில்  95 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளது. எனினும் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட் டங்களில் ஏராளமான குளம், குட்டைகள், தடுப்பணைகள் விடுபட்டுள்ளன. எனவே பொதுப்பணித் துறை ஆய்வு செய்து, விடு பட்ட பகுதிகளுக்கு அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் புதிய துணைத் திட்டத்தை உரு வாக்கி நீர் நிரப்புவதற்கு வழி வகை செய்ய  வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கேட் டுக் கொண்டுள்ளது.

வடுகபாளையம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து  சிபிஎம் காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு

அவிநாசி, செப். 26 – அவிநாசி அருகே வடுகபாளையம் ஊராட்சியில் மக்கள் பிரச்சனையை கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வா கத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் காத்திருக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.  வடுகபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள பழுதடைந்த மகளிர்  சுகாதார வளாகத்தைப் பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருப்பினும் பணிகள் நடைபெறவில்லை. உடனே பணிகளை துவக்க வேண்டும், ஆதிதிரா விடர் காலனிக்கு புதிய மழைநீர் வடி கால் அமைத்துதரவும், வடுகபா ளையம் பகுதிக்கு இரண்டு நாட்களுக்கு  ஒரு முறை குடிநீர் கிடைப்பதை முறையாக  விநியோகம் செய்யவம், ராயகவுண்டம்பு தூரில் விழுந்துவிடும் நிலையில் உள்ள  மேல்நிலைத் தொட்டியை அகற்றி புதிய  மேல்நிலைத் தொட்டி அமைத்துதர வும், நஞ்சை தாமரைக்குளம் ஆதி திரா விடர் காலனியில் உள்ள சாக்கடைக்கு மூடிகள் அமைத்து தரவும், கிராம நிர் வாக அலுவலகம் முன்பு உள்ள பழைய  கிணற்றுகளுக்கு கம்பிவலை அமைக்க வும், வடுகபாளையம், ராயகவுண்டம்பு தூர், நஞ்சை தாமரைக் குளம், பகுதி யில் உள்ள மயானத்தை சுத்தம் செய்து,  தெரு விளக்கு, சாலை ,குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தரவும், காட்டுவளவு பகு திக்கு கான்கிரீட் சாலை மற்றும் அண் ணாமலை கார்டனுக்கு தெரு விளக்கு  வசதி செய்து தரவும், வீட்டு குடிநீர்  இணைப்புக்கு விண்ணப்பித்தவர்க ளுக்கு உடனடியாக இணைப்பு வழங் கவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. மேலும் 2021 ஆம் வருடம் பிப்ர வரி மாதம் 17ஆம் தேதி 43 கோரிக்கை களை நிறைவேற்றி தருவதாக எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுத்த உறுதியை  நிறைவேற்றாமல் இருக்கும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடுகபாளை யம் ஊராட்சி கிளைகள் சார்பில் அக்டோ பர் 3ஆம் தேதி ஊராட்சிமன்ற அலுவல கம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கட்சியி னர் அறிவித்துள்ளனர்.

நிலக்கடலை ஏலம்

அவிநாசி, செப்.26- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  நடை பெற்ற நிலக்கடலை ஏலத் திற்கு 3,450  மூட்டைகள் வந்தி ருந்தன. ரூ.93 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

ஆசிரியர்கள் நேரடி மதிப்பீடு செய்வதே சரியான முறை  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

திருப்பூர், செப். 26 - தொடக்க நிலையில் உள்ள மாணவர்க ளுக்கு, கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே அவர்களை மதிப்பீடு செய்யும் நடை முறையே அறிவியல் பூர்வமாகவும், உளவி யல் அடிப்படையிலும் சரியானது என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது. இதன் மூலம், தேசிய கல்விக் கொள் கையை தமிழக அரசு பின்பற்றுகிறதா? என் றும் ஆசிரியர் கூட்டணியின் திருப்பூர் மாவட்ட  செயற்குழு கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் மாவட்ட செயற்குழு மாவட்டத் தலை வர் ராஜ்குமார் தலைமையில் திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரபு செபாஸ்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜா, மாவட்ட பொருளாளர் ஜெயலட்சுமி மற்றும்  கல்வி மாவட்ட மற்றும் வட்டாரப் பொறுப்பா ளர்கள் பங்கேற்றனர். இதில் பின்வரும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன:  2022 - 23 ஆம்கல்வி ஆண்டில் முதல் பருவ  தேர்வு திங்கள் கிழமை முதல் தொடங்க உள்ள  நிலையில் 4, 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  மாநில முழுவதும் ஒரே வினாத்தாளை பின் பற்றி தேர்வு நடத்துமாறு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் அலுவ லகம் ஆணை வெளியிட்டுள்ளது. 

இந்த வினாத்தாள்கள் வட்டார கல்வி அலு வலகம் மூலம் குறுவள மையத்தை சென்ற டைந்து, தினசரி தலைமை ஆசிரியர்கள் அங்கு சென்று அந்நாளுக்குரிய கேள்வித் தாளை பெற்றுச் சென்று தேர்வை நடத்த  வேண்டும். இது தொடக்கப் பள்ளி மாண வர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தொடக்க நிலையில் உள்ள மாணவர்க ளுக்கு, கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே அவர்களை மதிப்பீடு செய்யும் நடை முறையே அறிவியல் பூர்வமாகவும், உளவி யல் அடிப்படையிலும் சரியானது என்ப தனை மாவட்டச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.  மேலும் மத்திய அரசின் தேசிய கல்விக்  கொள்கையை கடுமையாக எதிர்க்கும் நம் மாநில அரசானது,தற்போது மாநில கல்விக்  கொள்கையை உருவாக்க மாவட்டந்தோறும்  பொதுமக்களிடம் கருத்துருக்கள் கேட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் இது  போன்ற தேசிய கல்விக் கொள்கையின் கூறு களை நடைமுறைப்படுத்துவது முரண்பா டாக இருக்கிறது.  எனவே மாணவர் நலன் கருதி 4, 5 வகுப்பு களுக்கான பொதுத்தேர்வு முறையினை ரத்து  செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட் டுள்ளது. 

தாக்குதலுக்கு கண்டனம்

அண்மை காலங்களில் பள்ளி வளாகத்திற்குள் வெளி நபர்கள் நுழைந்து ஆசிரியர்களை தாக்கும் நிகழ்வுகள் நடந் தேறி வருகிறது. இதை வன்மையாக கண்டிக் கிறோம். ஆசிரியர்களுக்கான பணி பாது காப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக  நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட் டது. மேலும், அண்மையில் மறைந்த தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளர் செ.நடேசன் உள்ளிட்ட மாநிலப் பொறுப்பாளர்களுக்கு இக்கூட்டத்தில் உருவப்படம் வைத்து  நினை வஞ்சலி செலுத்தப்பட்டது. 

குறைதீர் கூட்டம்

நாமக்கல், செப்.26- நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் தலைமையில், செப்டம் பர் 2022 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செப்.30 ஆம் தேதியன்று முற்பகல் 10.30 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட் டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதி நிதிகள் கலந்து கொண்டு தங் களது கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம் என நாமக் கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் அழைப்பு விடுத்துள்ளார்.


 




 

 

;