districts

img

கால்நடை மருத்துவ முகாம்

தருமபுரி. ஜூன் 28 - கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, கால்நடை பராமரிப்பு துறை மற்றும் ஆவின் நிறுவனம் இணைந்து, சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு  முகாம் தருமபுரி ஒன்றியம், குப்பூரில் நடைபெற்றது. சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் ஆவின்  நிறுவனம் இணைந்து நடத்திய கண்காட்சியை தருமபுரி  நாடாளுமன்ற உறுப்பினர் மரு. டிஎன்விஎஸ்.செந்தில்குமார்  திறந்து வைத்து பார்வையிட்டார்.  கண்காட்சியில் சிறுதானிய வகைகள்,நெல் வகைகள், வேளாண் இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள்,  ஆவின் நிறுவன பொருட்கள், கால்நடை தீவனங்கள், தீவனபயிர்கள் இடம்பெற்றிருந்தன. இதில், சிறந்த கால்நடை  பராமரிப்பாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன், கிழக்கு மாவட்ட  செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, தடங்கம் பெ.சுப்பிரமணி, ஆவின் ஒன்றிய பெருந்தலைவர் டி.ஆர்.அன்பழகன், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் சாமிநாதன், ஆவின் பொதுமேலாளர் மரு.காம ராஜ், உதவி பொதுமேலாளர் குமரன் அனைத்து பிரிவு  கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை  சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.