districts

வேலம்பட்டி சுங்கச்சாவடியை அனுமதிக்கக் கூடாது

திருப்பூர், ஜன.25- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சாலை யில் வேலம்பட்டி குட்டையை ஆக்கிரமித்து  கட்டப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்க  சாவடியை செயல்படுத்த அனுமதிக்க கூடாது என்று கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வலியுறுத்தினார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் செவ்வாயன்று, கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலை மையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், திருப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சி.மூர்த்தி, வேலம்பட்டி சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜி.பி.எஸ்.கிருஷ்ண சாமி உள்ளிட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் எஸ்.வினித்தை சந்தித்து மனு ஒன்றை  அளித்தனர். அதில், அவிநாசி முதல் அவிநாசிபாளை யம் வரை உள்ள இணைப்பு சாலை மாநில  நெடுஞ்சாலை வசம் இருந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையாக [என்எச்381] தரம் உயர்த்தப்பட்டது. மேற்படி சாலையின் மொத்த தூரம் 32 கிலோ மீட்டர் மட்டும் உள்ளது. மேற்படி சாலை தரம் உயர்த்திய போது, தனியார் நிலம் எடுக்காமல் ஏற் கனவே இருந்த பழைய சாலையின் மீது சாலை போடப்பட்டது. ஆக்கிரமிப்புகள் கூட அகற்றப்படவில்லை. நான்கு வழிச்சாலை களுக்கு ஏற்றவாறு நடைபாதைகள் அமைக்கப்படவில்லை. மழைநீர் செல்ல வடிகால் கால்வாய்கள் தொடர்ச்சியாக அமைக்கப்படவில்லை. மேலும் பல இடங் களில் சாலையின் அகலம் குறுகலாக இரண்டு வழிச்சாலையாக தான் உள்ளது. மேலும் மொத்த 32 கிலோமீட்டர் தூரத் தில் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் செல்கின்றது. இதில் 12 இடங்களில் போக்குவரத்து சிக் னல்கள் உள்ளது. நான்கு வழிச்சாலைக்கு உண்டான எந்த வசதியும் செய்யப்பட வில்லை.

ஆனால் சுங்கக் கட்டணம் வசூலிக்க சுங்கச்சாவடி கட்டும் வேலை மட்டும் நடை பெற்று வருகின்றது. மேற்படி சுங்கச்சாவடி கட்டியுள்ள இடம், வடக்கு அவினாசிபாளை யம் கிராமம் வேலம்பட்டி க.ச.எண் 40/1 இல் உள்ள பழமையான நீர் நிலை குட்டை  ஆகும். இந்த நீர்நிலை குட்டையின் கிழக்குப் பகுதியை, மண் நிரப்பி மூடி சுங்கச்சாவடி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. சாலையின் மேல்புறம் உள்ள நீர்நிலை குட்டையை மூடி  சுங்க சாலைகளும், வே பிரிட்ஜ் அமைப்ப தற்கு கட்டுமான பணிகளும் நடைபெற்று வரு கின்றது. மேற்படி நீர்நிலை குட்டையை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடங்களை அகற்றும்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பரிந்துரைபேரில் திருப்பூர் தெற்கு வட் டாட்சியர் அரசாணை எம்.எஸ்.540 படி ந.க எண் 3741/2018/அ4 ன் கீழ் கடந்த 19.12.2018 அன்று உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் இன்று வரை நீர்நிலை குட்டையில் ஆக்கிரமித்து  கட்டியுள்ள கட்டிடங்கள் அகற்றப்பட வில்லை. ஆனால் சுங்கம் வசூலிப்பதில் மட் டும் நிர்வாகம் முனைப்புடன் செயல்படு கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் என்.எச்.  381 நான்கு வழிச்சாலைக்கு உண்டான எந்த  வசதியும் செய்யாமல் உள்ளது. பழமை யான நீர்நிலை குட்டையை ஆக்கிரமித்து கட்டியுள்ள சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றி சுங்கமில்லா சாலையாக செயல் பட தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இதேபோன்று தனியார் பங்களிப்பு இல்லாமல் முழுவதும் அரசு நிதியில் அமைக்கப்பட்ட 130 கிலோமீட்டர் தூரமுள்ள கரூர், கோவை என்.எச். 67 இல்  பரமத்தி, மாதப்பூர் ஆகிய இரு இடங்க ளில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரத்து  செய்துள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்வதாக அந்த மனுவில் தெரிவித் துள்ளார்.