districts

img

சுங்கக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்

தருமபுரி, பிப்.21- பாலக்கோடு அருகே உள்ள கர்த் தாரஅள்ளி சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும், என லாரி உரிமை யாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை முதல் ஓசூர் வரை புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. 90 சதவிகித பணிகள் நிறை வடைந்துள்ள நிலையில், இச்சாலை யில் பாலக்கோடு அருகே உள்ள கர்த் தாரஅள்ளியில் சுங்கச்சாவடி அமைக் கப்பட்டுள்ளது. சாலைப் பணிகள் இன் னும் நிறைவடையாத நிலையில், எந்த அறிவிப்புமின்றி, கட்டண விபரங்கள் குறித்த அறிவிப்பு பலகைகள் எதுவும் வைக்கப்படாமல், வியாழனன்று முதல் தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு வந்ததாகக்கூறி சுங்கக்கட்டணம் வசூ லிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையை முழுவதும் பயன்படுத்தும் வாகனங்களுக்கும், பாலக்கோடு சுற்றியுள்ள பகுதியில் உள்ள வாகனங்களுக்கும் ஒரே வித மான கட்டணம் வசூலிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  இந்நிலையில், பாலக்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், உள் ளூர் வாகனங்களுக்கு கட்டண சலுகை வேண்டும் என வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அதில், வாகனங் களை பழுது பார்க்கவும், விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை அருகிலுள்ள தருமபுரிக்கு கொண்டு செல்கிறோம். மேலும், பாலக்கோடு சர்க்கரை ஆலைக்கு சுங்கச்சாவடி சுற்றியுள்ள பகுதியில் இருந்து கரும்பு பாரம் தினந் தோறும் ஏற்றி செல்கின்றனர். இத்த கைய சூழ்நிலையில் எல்லோருக்கும் ஒரே விதமான சுங்கக்கட்டணம் விதிப் பது என்பது விவசாயிகள், லாரி உரிமை யாளர்கள், உள்ளூர் வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். எனவே, உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கக்கட்ட ணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண் டும். அல்லது கட்டணத்தை குறைக்க  வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள் ளது.